This Article is From Jun 13, 2019

மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜிங்பிங்!

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும் முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தியா சீனா இடையே எல்லை பிரச்னை நீடித்து வருகிறது.

New Delhi:

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தாண்டு இறுதிக்குள் சீன அதிபர் ஜி ஜிங்பிங் இந்தியா வருவார் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்று வருகின்றன. இந்தியா சார்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழு பங்கேற்றுள்ளது.

சீன அதிபர் ஜி ஜிங் பிங் தலைமையில் சீன குழுவினர் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டின்போது, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும் சந்தித்து பேசினர். அப்போது, இந்தியா வருமாறு சீன அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். 

இதனை ஏற்று இந்தியா வருவதாக ஜிங்பிங் தெரிவித்திருக்கிறார். இந்த தகவலை மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரலில் உகானில் மோடியும், ஜிங்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தயிது குறிப்பிடத்தக்கது. 

.