This Article is From Jul 10, 2018

ஊதியத்தைக் கேட்டு ட்ரம்பின் மீது வழக்குப் பதிந்த முன்னாள் ஓட்டுநர்

திங்கட்கிழமை டிரம்ப் நிறுவனத்திற்கு எதிராக 2 லட்சம் டாலர் வழங்க கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஊதியத்தைக் கேட்டு ட்ரம்பின் மீது வழக்குப் பதிந்த முன்னாள் ஓட்டுநர்

59 வயதான நியோல் சின்ரோன் என்பவர் 20 வருடங்களுக்கு மேலாக அமெரிக்க அதிபர் டிரம்பின் ஓட்டுநராக பணிபுரிந்தவர். அதிக நேரம் பணி செய்ததற்கான ஊதியத்தை வழங்க வில்லை என டிரம்ப் நிறுவனத்தின் மீது, தற்போது அவர் வழக்குத் தொடுத்துள்ளார். 

திங்கட்கிழமை டிரம்ப் நிறுவனத்திற்கு எதிராக 2 லட்சம் டாலர் வழங்க கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.  2003 - ஆம் ஆண்டில் சின்ரோனின் ஊதியம் 62700 டாலர், 2010 - ல் 75000 டாலராக இருந்துள்ளது. இப்போதும் அவர் டிரம்பின் நிறுவனத்தில் பாதுகாப்பு ஊழியராக பணியாற்றி வருகிறார். 

'இவர் 2016 - ஆம் ஆண்டு பாதி வரை டிரம்பின் ஓட்டுநராக பணிபுரிந்தார். ரியல் எஸ்டேட் செய்பவர் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக மாறிய பிறகு ஓட்டுநரும் மாறி விட்டார்' என்கிறார் சின்ரோனின் வழக்கறிஞர். 

இது தொடர்பாக சின்ரோன் கூறியிருப்பதாவது:"அவர் பணி நேரம் பரவலாக மாறிக்கொண்டே இருக்கும். காலை 7 மணிக்கு தொடங்கி, டிரம்ப் தேவையில்லை என அவர் குடும்பம் கருதும் வரை பணி முடிய நேரமாகும். குறைந்த பட்சம் வாரத்திற்கு 50 மணி நேரம் வேலை இருக்கும்.

சின்ரோன் வழக்கறிஞர் லாரி ஹட்சர், " சின்ரோன் டிரம்ப் நிறுவனத்திடம் அதிக நேரம் பணி செய்ததற்கான ஊதியம் வழங்குமாறு கேட்டுக் கொண்டார் ஆனால் அவர்கள் தர மறுத்து விட்டனர். அதனால் சின்ரோன் வழக்கு பதிவு செய்தார் என்றார். 

டிரம்ப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், அமன்டா மில்லர், " சின்ரோனுக்கு அவர் பணி செய்ததற்கான ஊதியம் சட்டப்படி வழங்கப்பட்டது. உண்மை வெளிபடும் போது நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

சின்ரோன் 350,000  டாலர் வழங்க கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார், அதில் டிரம்ப் நிறுவனம் வழங்க வேண்டிய ஊதிய  தொகை , அதற்கான வட்டி மற்றும் வரி என அனைத்தும் அடங்கும் என்றார் வழக்கறிஞர் ஹட்சர். 

சின்ரோன் தொடர்ந்துள்ள வழக்கில், 'சின்ரோன்க்கு  2003- ல் இருந்து இரண்டு முறை மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது . அவர் ஊதிய உயர்வு கேட்ட போது அவருக்கு வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடை காரணம் காட்டி தர மறுத்து விட்டார் ட்ரம்ப். அதனால் அவர் வாங்கி வந்த 7000 டாலரை ஏற்றுக்கொண்டார்

டிரம்ப் நிறுவனம் சின்ரோனுக்கு ஊதிய உயர்வு வழங்கினால் அவரின் மருத்துவ காப்பீடு பாதிக்கப்படும் என்பதால் அவருக்கு 7000 டாலர் வழங்கப்பட்டது. இருப்பினும் இதன் மூலம் டிரம்ப் நிறுவனத்திற்கு  லாபம் தான். இருப்பினும் சின்ரோன் தொடர்ந்து ஊதிய உயர்வு கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனால் அவரின் மருத்துவ காப்பீடு மறுக்கப்பட்டது. 

ஆனால் சின்ரோனுக்கு வேலை அவசியமானதாக இருந்தது. அதனால் தான் அவர் இந்த வேலையை விடவில்லை' என்றார் ஹட்சர்



(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.