
ஒட்டு மொத்த உயிரிழப்பு 50,000ஐ நெருங்குகின்றது.
ஹைலைட்ஸ்
- கொரோனா மொத்த எண்ணிக்கையானது இன்று 25,89,682 ஆக அதிகரித்துள்ளது
- கடந்த 24 மணி நேரத்தில் 63,490 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு
- அதேபோல 944 பேர் உயிரிழந்துள்ளனர்
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது இன்று 25,89,682 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 63,490 நபர்கள் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல 944 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 49,980 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 6,77,444 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 18,62,258 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதமானது 71.91 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
இதுவரை நாடு முழுவதும் 2,93,09,703 பேரின் மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 7,46,608 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் இந்தியா கொரோனா தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே போல இறப்பு விகிதத்திலும் இந்தியா மற்ற நாடுகளை காட்டிலும் பின்தங்கியுள்ளது. இது சிறந்த அம்சமாகும். அமெரிக்கா 23 நாட்களில் 50,000 இறப்புகளை பதிவு செய்தது. பிரேசில் 95 நாட்கள் இந்த இறப்புகளை பதிவு செய்ய எடுத்துக்கொண்டது. மெக்சிகோ 141 நாட்களை எடுத்துக்கொண்டது. இந்நிலையில், இந்தியா 50,000 இறப்புகளை பதிவு செய்ய 156 நாட்களை எடுத்துக்கொண்டது என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.