This Article is From Apr 02, 2020

மும்பை தாராவியில் கொரோனா பாதித்த ஒருவர் உயிரிழப்பு!

அங்கு சீரமைக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள கட்டிடத்தை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை தாராவியில் கொரோனா பாதித்த ஒருவர் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவில் மொத்தம் 335 கொரோனா தொற்று நோயாளிகள் உள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • மும்பை தாராவி பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
  • 5 கி.மீ. அளவுள்ள தாராவில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,600-யை தாண்டியுள்ளது
Mumbai:

ஆசியாவிலே மிகப்பெரிய சேரி பகுதியான மும்பை தாராவியில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  தொடர்ந்து, அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதையடுத்து, அங்கு சீரமைக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள கட்டிடத்தை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 300-யை தாண்டியுள்ளது. 5 கிலோ மீட்டர் அளவுள்ள தாராவி பகுதியில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.

நேற்று மும்பையில் மட்டும் ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் 335 கொரோனா தொற்று நோயாளிகள் உள்ளனர். உயிரிழப்பு 16 ஆக உள்ளது.

இதற்கிடையே, மும்பையின் ஜஸ்லோக் மருத்துவமனையில் பணியாற்றிய நர்ஸ் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவு மூடப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிக்கு சிகிச்சை செய்ததால் நர்சுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நர்சுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்றும், அவர்கள் பரிசோதிக்கப்படுவார்கள் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்னொரு தனியார் மருத்துவமனையிலும் நர்ஸ் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, சந்தேகத்திற்குரிய நோயாளிகள் வாழ்ந்த மும்பை பகுதியில் மொத்தம் 145 கட்டுப்பாட்டு மண்டலங்களை பிஎம்சி அடையாளம் கண்டுள்ளது.

.