நிர்பயா வழக்கு : கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து குற்றவாளி முகேஷ் சிங் மேல்முறையீடு!!

நிர்பயா வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் சிங் மற்றும் பவன் குப்தா ஆகியோர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். 2012-ல் அவர்கள் செய்த குற்றத்துக்காக இந்த தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

நிர்பயா வழக்கு : கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து குற்றவாளி முகேஷ் சிங் மேல்முறையீடு!!

குற்றவாளிகளின் தண்டனையை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று நிர்பயாவின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

New Delhi:

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிடுவதில் மற்றொரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் குற்றவாளி முகேஷ் குமார் சிங் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பியிருந்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார். 

இந்த மேல் முறையீட்டு மனுவில், ' உச்ச நீதிமன்றத்தில் நடந்த சத்ருகன் சவுகான் வழக்கை மேற்கோள் காட்டி, கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து அரசியலமைப்பு சட்டம் பிரிவு 32-ன் கீழ் மேல் முறையீடு செய்திருக்கிறோம் ' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக முகேஷ் குமாரின் வழக்கறிஞர் பிருந்தா குரோவர் கூறியுள்ளார்.

நிர்பயா வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் சிங் மற்றும் பவன் குப்தா ஆகியோர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். 2012-ல் அவர்கள் செய்த குற்றத்துக்காக இந்த தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. பிப்ரவரி 1-ம்தேதி தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

to2kd5p8

முகேஷ் குமாரின் கருணை மனு ஜனவரி 17-ம்தேதி குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றவாளியான ஒருவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னொருவர் சிறார் என்பதால் அவருக்கு 3 ஆண்டுகள் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். 

முன்னதாக இந்த மாத தொடக்கதில் 2 குற்றவாளிகளின் சீராய்வு மனு டெல்லி நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து ஜனவரி 22-ம்தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, இன்னொரு குற்றவாளி முகேஷ் குமார் சிங் குடியரசு தலைவருக்கு கருணை மனுவை அனுப்பினார். இந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதன் பின்னர், மரண தண்டனை நிறைவேற்றப்படும் தேதி பிப்ரவரி 1 காலை 6 மணி என மாற்றி அமைக்கப்பட்டது. 

குற்றவாளிக்கு விரைந்து தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று நிர்பயாவின் பெற்றோர் வேண்டுகோள் வைத்துள்ளனர். 

முன்னதாக, திகார் சிறை அதிகாரிகள் குடியரசு தலைவரிடம் அனுப்பப்பட்ட கருணை மனுவுக்கு போதிய ஆவணங்கள் ஏதும் அளிக்கவில்லை என்று கூறி குற்றவாளிகள் தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எதிர்த்தரப்பில் குற்றவாளிகள் யுக்திகளை கையாண்டு தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. 

மரண தண்டனை குற்றவாளிகள் இவ்வாறு தங்களுக்கு தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிப்போட, பல்வேறு யுக்திகளை கையாளுகிறார்கள் என்று கருதிய மத்திய அரசு இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடியது. மரண தண்டனை கைதிகளின் தண்டனையை நிறைவேற்றுவது குறித்து நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

Listen to the latest songs, only on JioSaavn.com