பாஜகவில் இணைவதற்கு முன் பிரதமர் மோடியை சந்தித்த நீரஜ் சேகர்!

2014ஆம் ஆண்டு முதல் சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை எம்.பியாக இருந்து வந்த நீரஜ் சேகருக்கு அடுத்த ஆண்டு வரை பதவிக்காலம் உள்ளது. எனினும், அவர் ராஜினாமா செய்துள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
பாஜகவில் இணைவதற்கு முன் பிரதமர் மோடியை சந்தித்த நீரஜ் சேகர்!

அமித்ஷா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்களை சந்தித்தார் நீரஜ்.


New Delhi: 

முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகனான நீரஜ் சேகர் நேற்று தனது மாநிலங்களவை எம்.பி. பதவி மற்றும் திடீரென ராஜினாமா செய்த நிலையில், இன்று பாஜகவில் இணைவதற்கு முன்பு பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். 

மேலும், பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்களையும் நீரஜ் சேகர் சந்தித்தார். இதனிடையே, மாநிலங்களவை சபாநாயகர் வெங்கய்யா நாயுடு, நீரஜ் ராஜினாமா குறித்து அவையில் இன்று அறிவித்தார். 

சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான நீரஜ் சேகருக்கு, அடுத்த ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள நிலையில், நேற்று அவர் திடீரென ராஜினாமா செய்தார். தொடர்ந்து அவர், உத்தர பிரதேசம் மேல்சபை உறுப்பினராக பாஜக சார்பில் களமிறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உத்தரபிரதேசத்தில் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர் மீண்டும் பாஜக சார்பில் உத்தர பிரதேசத்தில் போட்டியிட்டால், அவர் எளிதில் வெற்றி பெறவும் முடியும்.  

நீரஜ் சேகர் அவரது தந்தையின் தொகுதியான பாலியாவில் கடந்த 2007 இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் களமிறக்கப்பட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, அதே தொகுதியில் 2009 தேர்தலிலும் களமிறக்கப்பட்டு மீண்டும் அவர் தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில், நீரஜ் சேகரின் திடீர் ராஜினாமாவை தொடர்ந்து, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு மாநிலங்களவையில் 9 உறுப்பினர்களும், மக்களவையில் 5 உறுப்பினர்களும் மட்டுமே உள்ளனர். 

பாலியா மக்களவை தொகுதியில் மீண்டும் நீரஜ் போட்டியிட விரும்பியதாகவும் அதற்கு அகிலேஷ் தரப்பு மறுப்பு தெரிவித்ததாகவும் தெரிகிறது. இதைத்தொடர்ந்தே இருவருக்கும் விரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை அமைந்ததை தொடர்ந்து, பல்வேறு எதிர்கட்சியை சேர்ந்தவர்களும் தங்களது கட்சியில் இருந்து விலகி பாஜகவுக்கு தாவிய வண்ணம் உள்ளனர். 

கோவாவில் இருந்து பல்வேறு காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜகவுக்கு கட்சி தாவிய நிலையில், தற்போது கர்நாடகாவிலும் காங்கிரஸ் - மஜத கூட்டணியை சேர்ந்த பல உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். 
 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................