This Article is From Aug 01, 2019

ஓடும் ரயிலில் விபரீத சாகசம்! - இரு இளைஞர்கள் கைது!

நேற்று டெல்லியில் NH-24 சாலையில் ஓடும் காரில் சாகசத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களின் வீடியோ சமூகவளைதங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து, போலீசார் அவர்கள் இருவரையும் கண்டறிந்து அபராதம் விதித்துள்ளனர்.

ஓடும் ரயிலில் விபரீத சாகசம்! - இரு இளைஞர்கள் கைது!

விபரீத சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள்.

Mumbai:

மும்பையில் ஓடும் ரயிலில் விபரீதமான சாகசத்தில் ஈடுபட்ட ஒரு இளைஞரின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இதுதொடர்பாக பரவும் அந்த வீடியோவில், காதுகளில் ஹெட்போன் அணிந்த அந்த இளைஞர் ரயில் பெட்டியின் இரும்பு கம்பிகளை பிடித்து தொங்கியபடியும், கால்களை வைத்து சறுக்கியபடி சாகசத்தில் ஈடுபடுகிறார். இதைதொடர்ந்து, அந்த இரண்டு இளைஞர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதேபோல், நேற்று டெல்லியில் NH-24 சாலையில் ஓடும் காரில் சாகசத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களின் வீடியோ சமூகவளைதங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து, போலீசார் அவர்கள் இருவரையும் கண்டறிந்து அபராதம் விதித்துள்ளனர். 

அந்த வீடியோவில், காலில் ஸ்கேட்டிங் சக்கரத்தை கட்டியபடி காரின் பின்பகுதியை பிடித்துக்கொண்டு ஓர் இளைஞர் செல்கிறார். மேலும், அவருடைய நண்பர் காரின் ஜன்னல்மீது அமர்ந்துக்கொண்டு வெளியே தொங்கியவாறு பயணிக்கிறார். இந்த காட்சிகளை, அதே சாலையில் பயணித்த மற்றுமொரு பயணி, அவரது கேமிராவில் பதிவு செய்து, இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவின் அடிப்படையில், போலீசார் அந்த இளைஞர்களை கண்டறிந்து அவர்களை எச்சரித்ததுடன், அவர்களிடம் அபராதமும் வசூலித்துள்ளனர். 

(With inputs from ANI)

.