சுஷாந்த் சிங் மரண வழக்கில் மும்பை போலீசார் இருவருக்கு சிபிஐ சம்மன்!

Sushant Singh Rajput death: சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது

சுஷாந்த் சிங் மரண வழக்கில் மும்பை போலீசார் இருவருக்கு சிபிஐ சம்மன்!

சுஷாந்த் சிங் மரண வழக்கில் மும்பை போலீசார் இருவருக்கு சிபிஐ சம்மன்!

Mumbai:

சுஷாந்த் சிங் மரண வழக்கில் மும்பை போலீசார் இருவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இந்த போலீசாரில் ஒருவர் மருத்துவனையில் உள்ளதாகவும், மற்றொருவர் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த வழக்குகளுடன் தொடர்புடைய சில ஆவணங்களையும் கொண்டு வருமாறு இரண்டு அதிகாரிகளையும்உ சிபிஐ கேட்டுக்கொண்டுள்ளது. 

பாலிவுடன் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிபிஐ அதிகாரிகள் மும்பையில் முகாமிட்டுள்ளனர். பீகாரில் உள்ள சுஷாந்த்தின் குடும்பத்தினர் மனரீதியாக தனது மகனுக்கு அழுத்தம் கொடுத்ததாக சக்ரவர்த்தி மீது குற்றம்சாட்டியுள்ளனர். தொடர்ந்து, சுசாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரவர்த்திக்கு சிபிஐ இன்னும் சம்மன் அனுப்பவில்லை. 

இதுவரை இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளான சுஷாந்தின் ஊழியர் மற்றும் அவரது நண்பர் சித்தார்த் பிதானி ஆகியோரை சிபிஐ விசாரித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு முன், சிபிஐ குழு கொலைக்கான வாய்ப்புகளை நிராகரிக்க வேண்டும். இது குற்றம் சார்ந்த இடம் மற்றும் தடயவியல் பரிசோதனை ஆகியவற்றை உள்ளடக்கியது.

சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது, ஆனால் பீகார் மற்றும் மகாராஷ்டிரா போலீசார் அதிகார வரம்பு மோதலை எதிர்கொண்டதை அடுத்து ரியா சக்ரவர்த்திக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசியல் புயலைத் தூண்டின.