This Article is From Aug 25, 2020

பிரசாந்த் பூஷன் வழக்கு: ‘எச்சரிக்கையோடு விடுவித்துவிடலாம்’ என அட்டர்னி ஜெனரல் வாதம்!

முன்னதாக, ட்விட்டரில் தான் கூறிய கருத்திற்கு பிரசாந்த் பூஷன், மூன்று நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

பிரசாந்த் பூஷன் வழக்கு: ‘எச்சரிக்கையோடு விடுவித்துவிடலாம்’ என அட்டர்னி ஜெனரல் வாதம்!

“இந்த முறை அவரை எச்சரிக்கையோடு விட்டுவிடலாம். இனி இதைப் போல் கருத்து சொல்ல வேண்டாம் என்று மட்டும் அவரிடம் சொல்லலாம்”

ஹைலைட்ஸ்

  • உச்ச நீதிமன்ற அமைப்பு பற்றி கருத்து கூறியிருந்தார் பூஷன்
  • தலைமை நீதிபதி பாப்டே பற்றியும் அவர் கருத்திட்டிருந்தார்
  • தன் கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று பூஷன் திட்டவட்டம்
New Delhi:

உச்ச நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே குறித்து ட்விட்டர் மூலம் கூறிய கருத்துக்கு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்ட நிலையில், ‘இந்த முறை அவருக்கு எச்சரிக்கை கொடுத்து விடுவித்துவிடலாம்' என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாதம் வைத்துள்ளார். 

“இந்த முறை அவரை எச்சரிக்கையோடு விட்டுவிடலாம். இனி இதைப் போல் கருத்து சொல்ல வேண்டாம் என்று மட்டும் அவரிடம் சொல்லலாம்” என்று உச்ச நீதிமன்றத்திடம் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் வாதாடினார். 

அவர் மேலும், பல முன்னாள் மற்றும் இன்னாள் நீதிபதிகள், நீதிமன்ற அமைப்பு மீது ஊழல் புகார்கள் சுமத்தியுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டினார். 

“நீதிமன்ற அமைப்பு மீது தெளிவற்று இருக்கும் விஷயங்கள் மீது சொல்லப்பட்ட கருத்தாகத்தான் பூஷனின் கருத்தைப் பார்க்க வேண்டும். அதன் மூலம் சீர்திருத்துங்கள் செய்ய வேண்டும்” என்று வாதத்தின் போது கூறினார் வேணுகோபால். 

முன்னதாக, ட்விட்டரில் தான் கூறிய கருத்திற்கு பிரசாந்த் பூஷன், மூன்று நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. நேற்றோடு அந்த கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் பூஷன், “நான் நம்பும் விஷயங்களை பிரதிபலிக்கும் வகையில்தான் கருத்திட்டிருந்தேன். அது குறித்து நிபந்தனைகளோடோ, நிபந்தனைகளற்றோ மன்னிப்பு கோருவது சரியாக இருக்காது. அது என் மனசாட்சிக்கு அவமதிப்பு செய்யும் வகையில் இருக்கும். எனவே எனக்கு கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றுக் கொள்ளத் தயார்” என்று திட்டவட்டமாக கூறியிருந்தார். 

.