பழைய ஷெட்டில் 30 பாம்புகள் : அதிர்ச்சியூட்டும் வீடியோ

இணையதளங்களில் பகிரப்பட்டதால் சுமார் 3 மில்லியன் மக்கள் இதுவரை பார்த்துள்ளனர். அத்துடன் அந்த வீடியோவை சுமார் 55,000 பேர் பகிர்ந்துள்ளனர்.

பழைய ஷெட்டில் 30 பாம்புகள் : அதிர்ச்சியூட்டும் வீடியோ

வட மற்றும் தென் அமெரிக்காவில் இவ்வகை பாம்புகள் அதிகபடியாக காணப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது வீட்டில் இருந்த ஷெட்டில் சுமார் 30 ராட்டில்  வகை பாம்புகள் இருக்கிற வெளியிட்ட வீடியோ காட்சிகள் தற்போது முகநூலில் வெளியானதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 வீடியோ காட்சியில் இடம்பெற்ற கோர்வான் என்னும் அந்த நபர் மற்றும் அவரது நண்பர்கள் சின்ன வகை பாம்பு ஊர்ந்து வீட்டிலுள்ள ஷெட்டிற்குள் ஊர்ந்து செல்வதை பார்த்தனர். அது பாம்புதானா என்று சரிபார்பதற்காக அப்பாம்பு பதுங்கிய எந்திரத்தின் அடியில் பார்த்தனர். அங்கு டஜன் கணக்குகளில் பாம்புகளைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

'நாங்கள் அதைக்கண்டு பயந்து விட்டோம், நிறைய பாம்புகளை பார்த்தால் நாங்கள் அந்த இயந்திரத்தை அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டோம்' என கோர்வான் கூரினார்.

Watch the video below:

 

மேலும் இந்த வீடியோ காட்சி இணையதளங்களில் பகிரப்பட்டதால் சுமார் 3 மில்லியன் மக்கள் இதுவரை பார்த்துள்ளனர். அத்துடன் அந்த வீடியோவை சுமார் 55,000 பேர் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ மிகவும் பயமுறுத்துவதாக இருப்பதாக பலர் கமெண்டுகள் கூறியுள்ளனர்.

அதைத்தொடர்ந்து ஆட்கள் நடமாட்டமில்லாத இடத்திற்க்கு அப்பாம்புகள் எடுத்து செல்லப்பட்டன.

 

 

More News