This Article is From Jan 05, 2020

மகாராஷ்டிராவில் அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு! யாருக்கு எந்த இலாகா? - முழு விவரம்

ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தை கடந்த நிலையிலும் அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு செய்யப்படாதது தொடர்பாக மகாராஷ்டிராவின் விகாஷ் அகாதி அரசை எதிர்காட்சியாக பாஜக கடுமையாக விமர்சித்து வந்தது.

மகாராஷ்டிராவில் அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு! யாருக்கு எந்த இலாகா? - முழு விவரம்

உத்தவ் தாக்கரே பொது நிர்வாகத்துடன், சட்டம் ஒழுங்கையும் பெற்றுள்ளார்.

Mumbai:

மகாராஷ்டிராவின் புதிய அரசின் அமைச்சர்களுக்கான இலாகா பட்டியலுக்கு அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியாரி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்து ஒரு மாதத்தை கடந்த நிலையில், அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதில், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கே முக்கிய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல தலைவர்கள் தங்கள் இலாகாக்களில் அதிருப்தி அடைந்துள்ளனர். .

மகாராஷ்டிராவில் ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சரவை இலாகா முழுவிவரம்:

1. உத்தவ் தாக்கரே (சிவசேனா): முதலமைச்சர், நிர்வாகம், சட்டம் மற்றும் ஒழுங்கு

2. அஜித் பவார் (என்சிபி): துணைமுதலமைச்சர், நிதி மற்றும் திட்டமிடுதல்

3. ஆதித்யா தாக்கரே (சிவசேனா): சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் 

4. அசோக் சாவான் (காங்கிரஸ்): பொதுப்பணித் துறை (PWD)

5. சுபாஷ் தேசாய் (சிவசேனா): தொழிற்சாலைகள், சுரங்கம் மற்றும் மராத்தி மொழி

6. சாகன் புஜ்பால் (என்சிபி): உணவு, சிவில் விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

7. திலீப் பாட்டீல் (என்சிபி): தொழிலாளர்கள் மற்றும் கலால்

8. அணில் தேஷ்முக்த (என்சிபி): உள்துறை

9. ஜெயந்த் பாட்டீல் (என்சிபி): நீர்ப்பாசனம்

10. நவாப் மாலிக் (என்சிபி): சிறுபான்மையினர் விவகாரங்கள்

11. பாலசாகேப் (காங்கிரஸ்): வருவாய்துறை

12. ராஜேந்திர சிக்னே (என்சிபி): மருந்து விநியோகம்

13. ராஜேஷ் (என்சிபி): பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்

14. ஹாசன் முஷ்ரிப் (என்சிபி): கிராமப்புற வளர்ச்சி

15. நிதின் ராவத் (காங்கிரஸ்): ஆற்றல்துறை

16. வர்ஷா (காங்கிஸ்): பள்ளிகல்வித்துறை 

17. ஜிதேந்திரா (என்சிபி): வீட்டுவசதி

18. எக்நாத் (சிவசேனா): நகர்புற வளர்ச்சி

19. சுனில் கேதா (காங்கிரஸ்): கால்நடை பராமரிப்பு மற்றும் பால்

20. விஜய் (காங்கிரஸ்): பிற சிறுபான்மையினர்

21. அமித் (காங்கிரஸ்): மருத்துவ கல்வி மற்றும் கலாச்சார விவகாரங்கள்

22. உதய் சமந்த் (சிவசேனா): உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி

23. தாதாஜி (சிவசேனா): விவசாயம் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் விவகாரம்

24. சஞ்சய் (சிவசேனா): வனத்துறை

25. குலேப்ராவ் (சிவசேனா): நீர் மற்றும் சுகாதாரம்
    
26. பத்வி (காங்கிரஸ்): ஆதிவாசிகள் 

27. பாலாசாகேப் (என்சிபி): கூட்டுறவுத்துறை

28. பும்ரே (சிவசேனா): வேலைவாய்ப்பு

29. அணில் பிராப் (சிவசேனா): போக்குவரத்து, சட்டப்பேரவை

30. அஸ்லாம் (காங்கிரஸ்): ஜவுளி, மீன்வளம் மற்றும் துறைமுக மேம்பாடு

31. தாக்கூர் (காங்கிரஸ்): பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி

32. சங்கர்ராவ் (கேஎஸ்பி): நீர் மற்றும் மண் பாதுகாப்பு 

33. தனஞ்செய் (என்சிபி): சமூக விவகாரம்

ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தை கடந்த நிலையிலும் அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு செய்யப்படாதது தொடர்பாக மகாராஷ்டிராவின் விகாஷ் அகாதி அரசை எதிர்காட்சியாக பாஜக கடுமையாக விமர்சித்து வந்தது.

இலாகாக்களை இறுதி செய்வதிலும், அறிவிப்பதிலும் தாமதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக சிறப்பு பிரிவுகளுக்காக தனி அமைச்சர்களுக்கு மாவட்டங்களை ஒதுக்குவதில் சிரமம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

.