மகாராஷ்ராவில் ஆட்சி அமைக்க சிவசேனாவின் ஆதரவை பெறுவோம்: நிதின் கட்கரி உறுதி!

Maharashtra government formation: சிவசோனாவுடன் நீடித்து வரும் அதிகாரப்பகிர்வு மோதலை முடிவுக்கு கொண்டு வர மகாராஷ்டிராவில் நிதின் கட்கரியை முதல்வராக களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் உள்ள தற்போதைய பிரச்சினை குறித்து நாக்பூரில் இருப்பவர்களிடம் ஆலோசிக்க உள்ளதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

New Delhi/Mumbai:

முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நாவிஸ் தலைமையின் கீழ் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் இதற்காக சிவசேனாவின் ஆதரவை நிச்சயம் நாங்கள் பெறுவோம் என உள்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

சிவசேனாவை சமாதானப்படுத்த நிதின் கட்கரியை பாஜக முதல்வராக களமறிக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், ஆர்எஸ்எஸ் தலைவரை சந்திக்க நாக்பூர் சென்றுள்ளார் நிதின் கட்கரி.

இதனிடையே, விமானம் ஏறுவதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த நிதின் கட்கரி, தேவேந்திர ஃபட்நாவிஸே அரசை வழிநடத்த வேண்டும். பாஜக 105 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், பாஜகவிலிருந்தே முதலமைச்சர் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

மகாராஷ்டிர தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி, மொத்தம் இருக்கும் 288 தொகுதிகளில் 161-ஐக் கைப்பற்றின. பாஜக, 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா, 56 இடங்களில் வெற்றியடைந்தது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அக்.24ம் தேதி முதல் தற்போது வரை மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பாஜக தலைவர் அமித்ஷாவுடன்  செய்யப்பட்ட'50:50' அதிகாரப்பகிர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த சிவசேனா வலியுறுத்தி வருகிறது. 

ஆட்சி அமைப்பதற்கு இன்னும் 24 மணி நேரமே இறுதி கெடு உள்ள நிலையிலும், தனது அதிகாரப்பகிர்வு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி உள்ளிட்ட கோரிக்கைகளில் சிவசேனா அடம்பிடித்துக்கொண்டிருக்கிறது.

ஏனினும், தேவேந்திர ஃபட்நாவிஸே முதல்வராக தொடர்வார் என பாஜகவும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. அதோபோல், இது தொடர்பாக முடிவு எடுக்க மோகன் பகவத், ஆர்எஸ்எஸ்-க்கு எந்த பங்கும் கிடையாது என நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். 

முன்னாதக, இந்த விவகாரத்தில் சிவசேனாவே ஆர்எஸ்எஸ் தலையீட்டை எதிர்நோக்கியது. இதுதொடர்பான சிவசேனா மூத்த தலைவர் கிஷோர் திவாரி எழுதியுள்ள அந்த கடிதத்தில், கூட்டணி தர்மத்தை பாஜக கடைபிடிக்கவில்லை என்றும் இந்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தலையிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 

More News