நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தினை இடிக்கும் மும்பை நகராட்சி!

சிவசேனாவுடனான சண்டையின் காரணமாக மகாராஷ்டிரா அரசாங்கம் தன்னை குறிவைத்து வருவதாகவும் கங்கனா குற்றம் சாட்டியுள்ளார்.

தனது அலுவலகத்தினை இடிப்பவர்களை பாக் ராணுவத்துடன் ரணாவத் ஒப்பிட்டுள்ளார்.

New Delhi:

திரைக்கலைஞரான கங்கனா ரணாவத், “எனது மும்பை இப்போது பாகிஸ்தான்” என மீண்டும் தன்னுடைய கருத்தினை அழுத்தமாக பதிவிட்டுள்ளார்.

இதே கருத்தினை முன்பு கூறியதற்காக அவர் மும்பை வருவதற்கு பலத்த எதிர்ப்பு மேலெழுந்திருந்தது. இந்நிலையில் அவருடைய அலுவலகம் முறையான அனுமதிகளுடன் கட்டப்பெறவில்லையெனக் கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடிக்க முயன்று வருகின்றனர். தற்போது அதிகாரிகள் தனது அலுவலகத்தினை இடிக்கும் படத்தினை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து மும்பையை பாகிஸ்தானுடன் அவர் மீண்டும் ஒப்பிட்டுள்ளார்.

சிவசேனாவுடனான சண்டையின் காரணமாக மகாராஷ்டிரா அரசாங்கம் தன்னை குறிவைத்து வருவதாகவும் கங்கனா குற்றம் சாட்டியுள்ளார்.

தனது அலுவலகத்தினை இடிப்பவர்களை பாக் ராணுவத்துடன் ரணாவத் ஒப்பிட்டுள்ளார்.

டிவிட்டரில் மும்பை மாநகராட்சியை குறிப்பிட்டு, தான் ஆசையாக கட்டிய கட்டிடத்தினை இடிக்க மாநகராட்சி விரும்புவதாகவும், ஆனால் அவர்கள் இதை செய்வதன் மூலமாக தன்னை பலவீனப்படுத்திவிட முடியாது என்றும் கங்கனா டிவிட் செய்துள்ளார்.

தொடர் அச்சுறுத்தல் இருக்கும் காரணத்தினால் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லையென அவர் கூறியிருந்தார். இந்நிலையில், மத்திய அரசு அவருக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பினை அளித்துள்ளது.

முன்னதாக மும்பையில் தான் வசிக்க அஞ்சுவதாக கங்கனா கூறியிருந்த நிலையில், அவர் மும்பையை விட்டு வெளியேற வேண்டுமென சிவசேனா தலைவர்கள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தகதக்து.