This Article is From Sep 30, 2019

மகாராஷ்டிரா தேர்தல் : சிவசேனாவின் முதல்வர் வேட்பாளராக ஆதித்யா தாக்கரே அறிவிப்பு!!

மகாராஷ்டிராவில் சிவசேனாவை பால் தாக்கரே கடந்த 1966-ல் ஆரம்பித்தார். அது முதற்கொண்டு அவரது குடும்பத்தை சேர்ந்த எவரும் தேர்தலில் போட்டியிடாமல் இருந்தனர். இப்போது முதன்முறையாக பால்தாக்கரே குடும்பத்தில் அவரது பேரன் நேரடி தேர்தலில் போட்டியிடுகிறார்.

மகாராஷ்டிரா தேர்தல் : சிவசேனாவின் முதல்வர் வேட்பாளராக ஆதித்யா தாக்கரே அறிவிப்பு!!

மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி அமைந்துள்ளது.

Mumbai:

மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அங்கு பாஜக - சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதில் சிவசேனாவின் முதல்வர் வேட்பாளராக பால் தாக்கரேவின் பேரனும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்யா தாக்கரே அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்த அறிவிப்புக்கு கூட்டணி கட்சியான பாஜகவிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை. கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஆதித்யா அறிவிக்கப்பட்டால் மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பு காணப்படும். 

பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவிதான் கொடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால், ஆதித்யா தாக்கரேவின் அரசியல் என்ட்டி இந்த தேர்தலில் என்னவாகும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  

மகாராஷ்டிராவில் சிவசேனாவை பால் தாக்கரே கடந்த 1966-ல் ஆரம்பித்தார். அது முதற்கொண்டு அவரது குடும்பத்தை சேர்ந்த எவரும் தேர்தலில் போட்டியிடாமல் இருந்தனர். இப்போது முதன்முறையாக பால்தாக்கரே குடும்பத்தில் அவரது பேரன் நேரடி தேர்தலில் போட்டியிடுகிறார். 

சிவசேனா வலுவாக இருக்கும் வோர்லி தொகுதியில் 29 வயதான ஆதித்யா தாக்கரே களம் இறக்கப்பட்டுள்ளார். 

சிவசேனாவை உருவாக்கிய பால் தாக்கரேவுக்கு அவரது மகனும், தற்போதைய தலைவருமான உத்தவ் தாக்கரே ஒரு வாக்குறுதி அளித்துள்ளாராம். அதாவது, சிவசேனாவை சேர்ந்த ஒருவர் மகாராஷ்ராவின் முதல் அமைச்சராக வருவார் என்பது அந்த வாக்குறுதி. இதனை கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற கூட்டத்தின்போது உத்தவ் தாக்கரே நினைவு கூர்ந்தார். 
 
.