This Article is From Aug 14, 2020

சரத் பவார் பேரனை கண்டித்ததை ஊடகங்கள் ஊதி பெரிதாக்கி விட்டன: சேனா விமர்சனம்!

மகாராஷ்டிராவில் உள்ள என்.சி.பியின் கூட்டனியான ஆளும் சிவசேனா கூறுகையில், பேரன் பர்த் பவார் சரத் பவாரால் பகிரங்கமாக கண்டிக்கப்பட்டதால் அரசியல் புயல் ஏற்பட்டதாக பேசப்பட்டது.

சரத் பவார் பேரனை கண்டித்ததை ஊடகங்கள் ஊதி பெரிதாக்கி விட்டன: சேனா விமர்சனம்!

சரத் பவார் பேரனை கண்டித்ததை ஊடகங்கள் ஊதி பெரிதாக்கி விட்டன: சேனா விமர்சனம்!

Mumbai:

சரத் பவார் பேரனை கண்டித்ததை ஊடகங்கள் ஊதி பெரிதாக்கி விட்டன என சிவசேனா விமர்சித்துள்ளது. 

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரியதற்காக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தனது பேரன் மருமகன் பர்த் பவாரை பகிரங்கமாக கண்டித்ததன் மூலம் சர்ச்சையை குறைத்து மதிப்பிட சிவசேனா இன்று முயன்றது.

மகாராஷ்டிராவில் உள்ள என்.சி.பியின் கூட்டனியான ஆளும் சிவசேனா கூறுகையில், பேரன் பர்த் பவார் சரத் பவாரால் பகிரங்கமாக கண்டிக்கப்பட்டதால் அரசியல் புயல் ஏற்பட்டதாக பேசப்பட்டது. எனினும், "தேநீர் கோப்பையில் கூட புயல் இல்லை" என்று சிவசேனா தெரிவித்துள்ளது. 

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. 

இதற்கிடையே ஆளும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் பேரனும், துணை முதல்வர் அஜித்பவாரின் மகனுமான பர்த் பவார் சமீபத்தில் மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை சந்தித்து சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் அண்மையில் சரத்பவார், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சந்திப்பு நடந்தது. இதையடுத்து சரத்பவாரை சந்தித்த செய்தியாளர்கள் பர்த் பவாரின் சிபிஐ கோரிக்கை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து அவர், எனது பேரன் கூறிய கருத்துக்கு நான் எந்த வகையிலும் முக்கியத்துவம் அளிக்கவில்லை. இளைஞரான அவர் முதிர்ச்சியற்றவர். எனக்கு மும்பை மற்றும் மராட்டிய போலீசார் மீது 100 சதவீதம் நம்பிக்கை உள்ளது என்பதை தெளிவாக கூறியுள்ளேன். 

அதே சமயம் யாரேனும் சிபிஐ விசாரணை கண்டிப்பாக வேண்டும் என்று கூறினால் அதை நாங்கள் எதிர்க்கவும் விரும்பவில்லை. இந்த வழக்கு தொடர்பாக மராட்டிய அரசு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை என்றார்.

இதுதொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின தலையங்கத்தில், ஊடங்கங்கள் இந்த பிரச்சனையை பெரிதாக ஊதிவிட்டதாக விமர்சித்துள்ளது. சரத் பவார் செய்ததில் எந்த தவறும் இல்லை. 

இந்த மக்கள் (செய்தி தொலைக்காட்சிகள்) தங்கள் வாழ்வாதாரத்திற்காக செயற்கை புயலை உருவாக்குகிறார்கள். பர்த் குறித்த சரத் பவாரின் கருத்துகள் பவார் குடும்பத்தில் அனைவருமே சரியாக இல்லை என்பதற்கான அடையாளமாக கருதப்படுகிறது. 

சரத் பவார் ஒரு மூத்த தலைவர் மற்றும் ஒரு அரசியல் கட்சியின் தலைவர். அவர் இளைஞர்களுக்கு அறிவுறுத்த முடியும். ஏன் மறைந்த (சிவசேனா நிறுவனர்) பால் தாக்கரே கூட அதைச் செய்துள்ளார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நம் நாக்கு நமது கட்டுப்பாட்டில் இல்லாதபோது, நாம் நிறைய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியவது வரும். அஜித் பவார் இதுபோன்ற பிரச்சினைகளை சந்தித்திருக்கிறார்."

இப்போது அவர் தன்னைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கிறார். அவரது மகன் பர்த் அரசியலில் புதியவர், அதனால்தான் அவரது கூற்றுகள் சர்ச்சையை உருவாக்குகின்றன. சில மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் கூட சிபிஐ விசாரணை கோரியுள்ளனர் "என்று அந்த தலையங்கம் பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸை மறைமுகமாக சாடியுள்ளது. 

அயோத்தியில் புதிய ராம் கோயில் கட்டுமானம் தொடங்கப்பட்டதை பார்த் பவார் வரவேற்று, அதைப் பற்றி நீண்ட பொது கடிதம் எழுதினார் என்று தலையங்கம் தெரிவித்துள்ளது.

"உச்சநீதிமன்ற ஒப்புதலுடன் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு ஆதரவாக பேசுவதில் தவறில்லை" என்று சேனா கூறியது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.