This Article is From Mar 07, 2019

தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம் ஏன்? தேர்தல் ஆணையம் விளக்கம்!

பிரதமர் மோடிக்கு சாதகமாகத் தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துகிறது என்றும் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு அறிவிக்கும் வரை காத்திருக்கிறது என்றும் எதிர்கட்சிகள் சரமாரியாக தேர்தல் ஆணையத்தை குற்றம்சாட்டி வருகின்றன.

தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம் ஏன்? தேர்தல் ஆணையம் விளக்கம்!

2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, மார்ச் 5ல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

ஹைலைட்ஸ்

  • தேர்தல் தேதி அறிவிக்க போதுமான காலஅவகாசம் உள்ளது.
  • எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை குற்றம்சாட்டுகிறது.
  • 2014 தேர்தலின் போது மார்ச் 5ல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
New Delhi:

தேர்தல் தேதியை அறிவிக்க போதுமான கால அவகசாம் இருக்கிறது என்றும் திட்டமிட்டு காலம் தாழ்த்துவதாக சில கட்சிகள் குற்றம்சாட்டுவது ஆதாரமற்றது என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் என்டிடிவிக்கு தகவல் தெரிவித்துள்ளது.

பிரதமர் திட்டம் படி நாங்கள் செயல்படவில்லை, நாங்கள் எங்கள் சொந்த திட்டம் படி செயல்படுகிறோம் என மூத்த தேர்தல் ஆணையர் கூறியுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, மார்ச் 5ல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடிக்கு சாதகமாகத் தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துகிறது என்றும் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு அறிவிக்கும் வரை காத்திருக்கிறது என்றும் எதிர்கட்சிகள் சரமாரியாக தேர்தல் ஆணையத்தை குற்றம்சாட்டி வருகின்றன.

இதேபோல், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் தாமதமானது. அப்போது பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் தேதி அறிவிப்பில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இருந்தது என காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இந்தமுறை, பிரதமர் மோடி நலத்திட்டங்களை அறிவிக்கும் வரை காத்திருந்து கடைசி நேரத்தில் தேர்தல் தேதி அறிவப்பதாக குற்றம்சாட்டுகிறது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் தனது டிவிட்டர் பதிவில், அதிகார்ப்பூர்வமாக பிரதமர் மோடியின் பயணதிட்டங்கள் முடிந்ததாக அறிவிக்கும் வரை தேர்தல் தேதியை அறிவிக்காமல் காத்திருக்கிறதா தேர்தல் ஆணையம் என கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரது டிவிட்டர் பதிவு மார்ச்-4ஆம் தேதி போடப்பட்டது. அதாவது முந்தைய தேர்தலின் போது தேர்தல் தேதி அறிவிக்கப்ட்ட நாளில் அவர் டிவிட் செய்துள்ளார்.

இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி கூறும்போது, இந்த முறை தேர்தல் தேதி அறிவிப்பை நிதானமாக அறிவித்துக்கொள்வதற்கான காலஅவகாசம் உள்ளது.

கடந்த 2014 பொதுத்தேர்தலின் போது, தேர்தல் முடிவு அறிவிப்பு தேதியானது மே.31, அதனால், தேர்தல் தேதி மார்ச்-5ல் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை தேர்தல் முடிவுகள் அறிவிப்பு தேதியானது ஜூன்.3 அதனால், தேர்தல் தேதி அறிவிக்க போதுமான காலஅவகாசம் இந்த முறை உள்ளது என்று தேர்தல் ஆணைய அதிகாரி என்டிடிவியிடம் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தை பொருத்தவரை, அதன் பிரதான வேலையே பல்வேறு மாநிலங்களின் தேர்தல் நடத்த அந்த மாநிலம் ஏற்றதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்வது தான். கடந்த சில மாதங்களாகவே, தேர்தல் ஆணைய அதிகாரிகள், இதனை உறுதி செய்ய நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த நேரத்தில், குறைந்தபட்சம் ஒரு மாநிலத்திலாவது ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல்களை நடத்தும் வாய்ப்பு உள்ளதா என்பதையும் அவர்கள் ஆராய்ந்து வருவதால் சில பணி சிக்கல்கள் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

 

.