This Article is From Dec 26, 2019

டெல்லி சட்டமன்ற தேர்தல்: பிப்.22க்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை!

இந்த தேர்தல் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒரு பெரும் சோதனையாக இருக்கும். 2015ல் டெல்லியில் சிறந்து செயல்பட்டபோதும் ஒப்பீட்டளவில் புதிய கட்சியான ஆம் ஆத்மி 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த தேசியத் தேர்தலில் இந்த கட்சி அதிக வெற்றியை பெறவில்லை. 

டெல்லி சட்டமன்ற தேர்தல்: பிப்.22க்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை!

பிப்.22க்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை!

New Delhi:

வரும் பிப்.22ம் தேதிக்குள் டெல்லி சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இதர அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. 

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கான தேர்தல் பிரச்சாரத்தை அரசியல் கட்சிகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. இதற்காக ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் மக்களை சந்தித்து பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. 

இந்த தேர்தல் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒரு பெரும் சோதனையாக இருக்கும். 2015ல் டெல்லியில் சிறந்து செயல்பட்டபோதும் ஒப்பீட்டளவில் புதிய கட்சியான ஆம் ஆத்மி 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த தேசியத் தேர்தலில் இந்த கட்சி அதிக வெற்றியை பெறவில்லை. 

பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் வெற்றி சூத்திரத்தை பயன்படுத்தி டெல்லியை கைப்பற்ற பாஜக தீவிர முனைப்பு காட்டி வருகிறது. 

வீட்டு வசதி, கல்வி மற்றும் மாநில அந்தஸ்து உள்ளிட்டவை டெல்லியில் பெரும் பிரச்சினைகளாக உள்ளன. 

டெல்லியில் கடந்த வாரம் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி 2015 சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை கைப்பற்றியதை விட வரவிருக்கும் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. டெல்லியே நமது கட்சி தொடங்கிய தளமாக இருப்பதால், நாம் தேர்தலில் கடுமையாக போராட வேண்டும்" என்று எட்டாவது தேசிய கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் கூறினார்.

எங்கள் இலக்கு மிகப்பெரியது, கடந்த முறை நாங்கள் 67 தொகுதிகளில் வெற்றி பெற்றோம், இந்த முறை அதனைவிட குறைந்துவிடக்கூடாது. அந்த எண்ணிக்கையை விட அதிகமாக இருக்க வேண்டும் என்றும் 70க்கு 70க்கு என்றும் அவர் முழுங்கினார். 

தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோரின் 'ஐ-பேக்' நிறுவனத்துடன் இணைந்து ஆம் ஆத்மி இந்த தேர்தலை சந்திக்கிறது. 

.