நாடாளுமன்றத்ல் காலியாகும் 18 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 19-ல் நடைபெறுகிறது

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் இந்த ஆண்டு தொடக்கத்தில் காங்கிரசிலிருந்து பாஜகவுக்கு தாவிய ஜோதிராதித்ய சிந்தியாவும் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்ல் காலியாகும் 18 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 19-ல் நடைபெறுகிறது

வேட்பு மனுத்தாக்கல் விரைவில் தொடங்கவுள்ளது.

New Delhi:

நாடாளுமன்றத்தில் காலியாகும். 18 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து நாடு தழுவிய பொதுமுடக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மார்ச் மாதம் நடைபெறவிருந்த தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்டன. 

தற்போது பொதுமுடக்கம் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மாநிலங்களை உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை எம்.பி.க்கள்  பட்டியலில் ஆந்திரா மற்றும் குஜராத்திலிருந்து தலா 4 இடங்களும், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருந்து தலா மூன்று இடங்களும், ஜார்க்கண்டிலிருந்து இரண்டு இடங்களும், வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் மணிப்பூரிலிருந்து தலா ஒரு இடமும் அடங்கும். ஜூன் 19 ஆம் தேதி காலை 9 மணிக்கு வாக்களிப்பு தொடங்கவுள்ளது. 

பிப்ரவரியில், 17 மாநிலங்களில் 55 இடங்களை நிரப்புவதற்கான தேர்தலை ஆணையம் அறிவித்தது. மார்ச் மாதத்தில், 10 மாநிலங்களில் 37 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மீதம் உள்ள 18 பேரை தேர்வு செய்வதற்கான தேர்தல்தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் இந்த ஆண்டு தொடக்கத்தில் காங்கிரசிலிருந்து பாஜகவுக்கு தாவிய ஜோதிராதித்ய சிந்தியாவும் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரசின் கே.சி.வேணுகோபால் ராஜஸ்தானில் இருந்து போட்டியிடுகிறார். இன்னும் சில முக்கிய புள்ளிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.