This Article is From Apr 09, 2019

முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வைக்கும் வேண்டுகோள்

Lok Sabha elections 2019: “18 வயதை அடையும்போது கிடைக்கும் முதல் ஓட்டினை நாட்டை வலுவாக மாற்றக்கூடிய வலுவான அரசுக்கு வாக்களியுங்கள்” என்று கூறினார்.

Lok Sabha elections 2019: உங்கள் முதல் ஓட்டினை வீணாக்காதீர்கள்

Latur, Maharashtra:

பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்ளர்கள் பாஜக வுக்கு வாக்களிக்க கோரி பிரசாரம் செய்தார். “உங்களின் முதல் ஓட்டு நாட்டின் வளர்ச்சிக்கு மைல்கல்லாக இருக்கும். நாட்டை பலப்படுத்த உதவும்” என்று கூறினார். “உங்கள் முதல் வாக்கு விவசாயிகளின் நிலத்திற்கு தண்ணீரைக் கொண்டு போய் சேர்க்கும்.” என்று மகாராஷ்டிராவின் லடூரில் பேசினார். நாட்டின் வளர்ச்சிக்கு பிஜேபிக்கு வாக்களிக்க கோரி பிரசாரம் செய்தார். 

பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி “ முதல் முறை வாக்களிப்பவர்களிடம் கேட்டுக் கொள்வது இதுதான், உங்களின் முதல் ஓட்டு பாலக்கோட்டில் விமானத் தாக்குதல் செய்த வீரர்களுக்கு பெருமை சேர்க்கும். புல்வாமாவில் இறந்த துணிச்சல் மிக்க வீரர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் உங்களின் முதல் ஓட்டு இருக்கும்” என்று கூறினார்.  

பா.ஜ.க தலைவர் எல்.கே அத்வானி கூறுகையில், “எதிர்க்கட்சிகள் தேச விரோதமானவை” என்று பிரசாரம் செய்து வந்தன. இதற்கு காங்கிரஸ் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது. 

பிரதமர் “18 வயதை அடையும்போது கிடைக்கும் முதல் ஓட்டினை நாட்டை வலுவாக மாற்றக்கூடிய வலுவான அரசுக்கு வாக்களியுங்கள்” என்று கூறினார். 

.