This Article is From Mar 08, 2019

'எங்களுக்கு எண்ணிக்கை முக்கியம் அல்ல' - கர்நாடக முதல்வர் குமாரசாமி பேட்டி

மத சார்பற்ற ஜனதா தளம் கட்சி எதிர்பார்த்த 12 தொகுதிகளுக்கு பதிலாக 8 தொகுதிகளில் போட்டியிடக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடக முதல்வர் குமாரசாமி என்.டி.டி.வி.க்கு பேட்டி அளித்துள்ளார்.

New Delhi:

மக்களவை தேர்தலில் வெற்றிதான் முக்கியம் என்றும், எத்தனை தொகுதிகளில் தாங்கள் போட்டியிடுவது முக்கியம் அல்ல என்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

கர்நாடக முதல்வர் குமாரசாமி என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
எத்தனை தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுகிறோம் என்பது எங்களுக்கு முக்கியம் அல்ல. ஒட்டுமொத்தமாக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி  பெறுகிறது என்பதற்குத்தான் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். 

மாண்டியா தொகுதியில் எனது தந்தை போட்டியிட விரும்பவில்லை. எனவே இதுபற்றி கட்சி  தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

இவ்வாறு அவர் கூறினார். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் காங்கிரஸ் 18 தொகுதிகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதசார்பற்ற ஜனதா தளம் தரப்பில் 12 தொகுதிகள் வரை டிமாண்ட் செய்யப்பட்டது.

ஆனால் கடைசிகட்ட தகவலின்படி மதசார்பற்ற ஜனதா தளம் இந்த தேர்தலில் 8 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் என தெரிகிறது. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் மத்தியில் யார் மைசூரு, தும்கூர் மற்றும் சித்திரதுர்கா ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவது என்பதில் போட்டி காணப்படுகிறது. 
 

.