This Article is From Mar 17, 2020

கொரோனா பரவுவதைத் தடுக்க `பிரேக் தி செயின்' திட்டம்!

இந்தியாவில், இதுவரை 126 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவுவதைத் தடுக்க `பிரேக் தி செயின்' திட்டம்!

இந்த பிரச்சாரம் பொது மற்றும் தனிப்பட்ட சுகாதாரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களுக்கு அறிவுறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க கைகளை கழுவும் திட்டமான 'பிரேக் தி செயின்' திட்டத்தை கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 

பொது மற்றும் தனிப்பட்ட சுகாதாரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களுக்கு அறிவுறுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சாரத்தின் கீழ், பினராயி விஜயன் தலைமையிலான அரசு ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் போன்ற இடங்களில் பொது இடத்தில் தண்ணீர் குழாய்களை ஹேண்ட் வாஷ் பாட்டில்களுடன் நிறுவியுள்ளது.

இதேபோல், பொதுமக்கள் வெளியடங்களுக்கு செல்லும் போது, கிருமிநாசினிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அனைத்து அலுவலகங்களிலும் கிருமிநாசினிகள் வைக்கப்பட்டுள்ளன. 

முன்னதாக, மாநிலத்தில் மூன்று புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக முதல்வர் ஊடகங்களுக்கு அறிவித்தார், இதுவரை கேரளாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உள்ளது. 


 

.