This Article is From Nov 15, 2018

ஜி.எஸ்.எல்.வி. மாக் -3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் நேற்று மதியம் 2.50-க்கு தொடங்கியது

ஜி.எஸ்.எல்.வி. மார்க் - 3 விண்ணை நோக்கி செல்லும் காட்சி

Sriharikota:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ நிறுவனம், தகவல் தொடர்புக்காக ஜி.எஸ்.எல்.வி. மார்க் -3 - டி2 என்ற தகவல் தொழில்நுட்ப ராக்கெட்டை தயாரித்துள்ளது. இந்த ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்தியாவிலேயே அதிக எடையை சுமந்து செல்லும் இந்த ராக்கெட்டிற்கு “பாகுபலி'‘ என்ற பெயரையும் சூட்டியுள்ளனர். இந்த ராக்கெட் வெற்றிகரமாக சென்றுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

6m3s30tg

இந்தியாவால் விண்ணில் செலுத்தப்படும் 33.வது தொலைத் தொடர்பு செயற்கை கோள் ஜிசாட்.29

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயலால் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் நிகழ்வு பாதிக்கப்படவில்லை. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் 67.வது ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் நேற்று பகல் 2.50-க்கு தொடங்கியது. இந்த ராக்கெட்டின் மூலம் ஜிசாட் - 29 செயற்கைகோள் விண்ணில் நிலைநிறுத்தப்படும். இது 3,423 கிலோ எடை கொண்டது.

நடப்பாண்டில் மட்டும் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பும் 5-வது ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் தொழில்நுட்பத்திற்கு உதவும் இந்த செயற்கை கோள் மூலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இன்டர்நெட் சேவையை சிறப்பாக கொண்டு வர முடியும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

.