This Article is From Jul 24, 2019

3 ஆண்டுகளில் 239 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்திய இஸ்ரோ! ரூ. 6,289 கோடி வருமானம்!!

ஆன்ட்ரிக்ஸ் என்ற பெயரில் இஸ்ரோவின் வர்த்தக பிரிவு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு மத்திய அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.

3 ஆண்டுகளில் 239 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்திய இஸ்ரோ! ரூ. 6,289 கோடி வருமானம்!!

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

New Delhi:

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 239 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோவின் வர்த்தக பிரிவான ஆன்ட்ரிக்ஸ் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ரூ. 6,289 கோடி வருமானம் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது. 

ஆன்ட்ரிக்ஸ் என்ற பெயரில் இஸ்ரோவின் வர்த்தக பிரிவு செயல்பட்டு வருகிறது. தனியார் செயற்கை கோள்கள், மற்ற நாடுகளின் செயற்கை கோள்கள் போன்றவற்றை வர்த்தக முறையில் ஆன்ட்ரிக்ஸ் விண்ணில் செலுத்துகிறது. இதன் மூலம் செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு மத்திய அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. 

இந்த நிலையில் ஆன்ட்ரிக்ஸ் தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பிரதமர் அலுவலக அமைச்சர் ஜிதேந்திரா சிங் பதில் அளித்துள்ளார். 

அதில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிட்டெட் 239 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. இதன் மூலமாக மத்திய அரசுக்கு ரூ. 6,289.05 கோடி வருமானம் கிடைத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது இஸ்ரோ சந்திரயான் 2 செயற்கை கோள நிலவுக்கு அனுப்பியுள்ளது. இது அடுத்த மாதம் 20 - ம்தேதி நிலவை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

.