இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலை பேரிடராக அறிவித்தது மத்திய அரசு!!

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலை பேரிடராக அறிவித்தது மத்திய அரசு!!

கொரோனா வைரசுக்கு இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

New Delhi:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலை பேரிடராக மத்திய அரசுஅறிவித்துள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கை பணிகள் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், கொரோனா வைரஸ் தாக்குதலை சுகாதார அவசரநிலை என்று பொருள் கொள்ள முடியாதென்று மத்திய அரசு கூறியுள்ளது. 

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள், தற்காலிக முகாம்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, தண்ணீர், உடை, மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தருதல், கட்டாய மருத்துவ சிகிச்சை பெறும் முகாம்களை அமைத்தல் உள்ளிட்டவை தொடர்பாகவும் மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளதால் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கொரோனா பாதிப்புக்கு நிதியை பயன்படுத்த முடியும். 

இதனை கூடுதல் மருத்துவ முகாம்கள், சோதனை மையங்கள் அமைத்தல், போலீசாருக்கு பாதுகாப்பு கருவிகளை வாங்குதல், துப்புரவு பணியாளர்களுக்கான பாதுகாப்பு, வெப்பநிலை கருவிகள் உள்ளிட்டவை வாங்குவதற்கும் பயன்படுத்தலாம். 

இதற்காக ஆகும் செலவு மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ஒதுக்கப்படும் தொகையில் 10 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் 80 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 76 வயதான முதியவரும், டெல்லியில் 68 வயதுடைய பாட்டியும் உயிரிழந்துள்ளனர். 
 

qhg4jblg

5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உலகளவில் பலியாகியுள்ளனர். 1.30 லட்சம்பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தடுப்பு நடவடிக்கையாக நில எல்லைகளை மத்திய அரசு மூடியுள்ளது. தூதரக, வேலை வாய்ப்பு விசாக்களை தவிர்த்து மற்ற விசாக்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தியேட்டர், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதேபோன்று ஐ.பி.எல். கிரிக்கெட் மேட்ச்சுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய ஐ.டி. நிறுவனமான இன்போசிஸ் தனது மும்பை அலுவலகத்தை நேற்று மூடியுள்ளது.

சீனாவின் வுஹான் நகர மார்க்கெட்டில் தோன்றியதுதான் இந்த கொரோனா வைரஸ். குண்டூசி அளவு கூட இல்லாத இந்த வைரஸ், இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 

5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உலகளவில் பலியாகியுள்ளனர். 1.30 லட்சம்பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனாவை தொற்று நோயாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு ஏற்ப உலகளவில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.