This Article is From Nov 14, 2019

PM Modi Letter To Chief Justice : போலிச் செய்திக்கு கண்டனம் தெரிவித்த இந்தியா

 “ இது போன்ற போலியான தீங்கிழைக்கும் செய்திகளை வேண்டுமென்றே பரப்புவதற்கும் சமூகங்களை பிளவு படுத்துவதற்கும் இந்தியா கடுமையான கண்டணங்களை தெரிவிக்கிறது”

PM Modi Letter To Chief Justice : போலிச் செய்திக்கு கண்டனம் தெரிவித்த இந்தியா

சமூகங்களை பிளவு படுத்துவதற்கும் இந்தியா கடுமையான கண்டணங்களை தெரிவிக்கிறது

New Delhi:

பிரதமர் நரேந்திர மோடி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்க்கு கடிதம் எழுதியதாக பங்களாதேஷின் உள்ளூர் ஊடகங்களில் பரவிய போலி கடிதம் குறித்து இந்தியா கண்டனத்தை தெரிவித்துள்ளது.

 “ இது போன்ற போலியான தீங்கிழைக்கும் செய்திகளை வேண்டுமென்றே பரப்புவதற்கும் சமூகங்களை பிளவு படுத்துவதற்கும் இந்தியா கடுமையான கண்டணங்களை தெரிவிக்கிறது” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் ஒரு ட்விட்டில் தெரிவித்துள்ளார். 

டாக்காவில் உள்ள இந்திய உயர் அதிகாரம் வெளியிட்ட  கடிதத்தை இணைத்துள்ளார். “ அந்த செய்தி முற்றும் போலி மற்றும் தீங்கிழைக்கும்” எண்ணத்துடன் வெளியிடப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

“இது பங்களாதேஷில் மக்களை தவறாக வழிநடத்துவதற்கும் சமூக வேற்றுமையை உருவாக்குவதுமே நோக்கமாக உள்ளது. இந்தக் கடிதம் பொது களத்தில் இந்தியாவை பற்றிய தவறான புரிதலை உருவாக்குவதற்காக வேண்டுமென்றே போலியான மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாக” அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

.