This Article is From Mar 04, 2020

உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் 2 பேர் மீது தாக்குதல்!! வைரலான வீடியோவால் பதற்றம்

6-7 பேர் கொண்ட கும்பல் 2 பேரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடி உதை கொடுக்கிறது. வலி தாங்க முடியாமல் 2 பேரும் கதறத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் மஞ்சள் பேன்ட்டும், ஆரஞ்சு வண்ண சட்டையும் அணிந்த ஒருவர் லத்திக் கம்பை எடுத்து தாக்கத் தொடங்குகிறார்.

உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் 2 பேர் மீது தாக்குதல்!! வைரலான வீடியோவால் பதற்றம்

புலந்த்சார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹைலைட்ஸ்

  • தாக்குதல் சம்பவம் திங்களன்று நடந்தது. தற்போது வீடியோ வைரலாகியுள்ளது
  • டெல்லி என்று நினைத்தாயா? என்று கேட்டு முஸ்லிம்கள் மீது தாக்குதல்
  • புலந்த்சார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Bulandshahr, Uttar Pradesh:

உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதியான புலந்த்சாரில் முஸ்லிம்கள் 2 பேர் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

பாதிப்புக்கு ஆளான ஒருவர், தாக்குதல் நடத்தியவர்கள் மத ரீதியாக இழிவாக பேசியதாகவும், பசுவை கொன்றதாக குற்றம் சாட்டியதாகவும் கூறியுள்ளார். மேலும், ஆசிட் வீசி விடுவோம் என அவர்கள் எச்சரிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

இந்த அதிர்ச்சி தரும் வீடியோ இன்று வைரலானது. அதில் 6-7 பேர் கொண்ட கும்பல் 2 பேரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடி உதை கொடுக்கிறது. வலி தாங்க முடியாமல் 2 பேரும் கதறத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் மஞ்சள் பேன்ட்டும், ஆரஞ்சு வண்ண சட்டையும் அணிந்த ஒருவர் லத்திக் கம்பை எடுத்து தாக்கத் தொடங்குகிறார். 

தாக்குதலுக்கு ஆளானவர் தன்னை விட்டு விடுமாறு அடி கொடுப்பவர்களிடம் கெஞ்சுகிறார். பின்னர் 2 பேரும் கார் ஒன்றில் கட்டிப்போடப்பட்டனர். அதன்பின்னர் அடி உதை தொடர்ந்தது. 

இந்த வீடியோவை யார் எடுத்தார்கள் என்பது தெரியவில்லை. வீடியோவில், மோட்டார் சைக்கிளில் இருப்பவர்கள் இந்த தாக்குதலை சாதாரணமாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

தாக்குதலுக்கு பின்னர் பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த பேட்டியில், 'நாங்கள் மார்க்கெட்டுக்கு கேரட் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தோம். தாக்குதல் நடத்தியவர்கள் எங்களைப் பார்த்ததும் வண்டியை நிறுத்தி விட்டு எங்களை தாக்கத் தொடங்கினர். அவர்களின் ஒருவர் இது என்ன டெல்லியென்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? என்று கேட்டு அடித்தார். 

என்னுடன் வந்தவர் இழுத்துச் செல்லப்பட்டார். அங்கு செயின் மற்றும் ஆயுதங்களுடன் சிலர் இருந்தனர். டெல்லி வன்முறைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. நாங்கள் எல்லோரும் அண்ணன் தம்பிகளாக இங்கு இருக்கிறோம்' என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக புலந்த்சார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

டெல்லியில் நடந்த வன்முறையில் 48 போ உயிரிழந்துள்ளனர். 200-க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பள்ளிகள், வீடுகள், கடைகள் உள்ளிட்டவை கடுமையாக தாக்கப்பட்டுள்ளன. 

வன்முறைக்கும்பல் வாட்ஸ் ஆப் குழுக்களை பயன்படுத்தி தாக்குதலை ஒருங்கிணைத்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தற்போது வரையில் 5 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 

அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு மத அச்சுறுத்தல் காரணமாக வரும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை திருத்த சட்டம் குடியுரிமையை வழங்குகிறது. இந்த சட்டம் முஸ்லிம்கள், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்கின்றன. 

.