This Article is From Sep 18, 2018

தினமும் ஹெலிகாப்டரில் சுற்றும் பாக். பிரதமர் - ஊடகங்கள் விமர்சனம்

சிக்கன நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிவிட்டு பாகிஸ்தான் பிரதமர் தினமும் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனை பாகிஸ்தான் ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.

தினமும் ஹெலிகாப்டரில் சுற்றும் பாக். பிரதமர் - ஊடகங்கள் விமர்சனம்

அரசு வாகனங்களை குறைப்பதன் மூலம் நாட்டின் கஜானாவை பாதுகாப்பதாக இம்ரான் கான் கூறி வருகிறார்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த வெள்ளியன்று அளித்த பேட்டியில், என்னால் செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயையும் நான் எண்ணிப் பார்ப்பேன். சிக்கன நடவடிக்கை மேற்கொள்வேன் என்று கூறினார். இதற்கு முன்பாக தேவையற்ற ஆடம்பரத்தை தவிர்ப்பேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தினமும் தனது பயணத்திற்காக ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருகிறார். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது ஹெலிகாப்டர் பயணத்தை நியாயப்படுத்தும் விதமாக பேட்டியளித்த தகவல் அமைச்சர் சவுத்ரி, மோட்டார் வாகனத்தை விட ஹெலிகாப்டர் குறைந்த அளவு எரிபொருளே எடுத்துக் கொள்வதாக கூறினார்.

இதனை கிண்டலடித்துள்ள பாகிஸ்தான் ஊடகங்கள், “ மெட்ரோ மற்றும் பஸ் சேவையை நிறுத்தி விட்டு மக்கள் பயன்பாட்டிற்காக அரசு ஏன் ஹெலிகாப்டரை இயக்க கூடாது?” என்று கேள்வி எழுப்பி வருகின்றன.
ஆனால் ஹெலிகாப்டரை பொருத்தளவில் எரிபொருள், பராமரிப்பு உள்ளிட்டவைகளை கணக்கிடும்போது மணிக்கு 2 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் செலவாகிறது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.