This Article is From Nov 30, 2018

"பழசை பற்றி தெரியாது, இந்தியாவுடன் நட்புக்கு தயார்" - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

தாவுத் இப்ராஹிம் தான் 1993 குண்டுவெடிப்புகளின் முக்கிய புள்ளி, மும்பையில் வெவ்வேறு இடங்களில் 12 குண்டுகள் வெடித்து 257 பேர் கொல்லப்பட்டனர்.

தாவூத், பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக ஐநாவிடம் இந்தியா புகார் அளித்துள்ளது.

Islamabad:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்தியாவுடன் நட்புறவு பாராட்டவே விரும்புகிறார். வியாழனன்று என்டிடிவிக்கு அளித்த பதிலில் ''நான் பழைய விஷயங்களுக்கு பொறுப்பேற்க விரும்பவில்லை. புதிய உறவுகளுக்கு பாலமைப்போம்'' என்று கூறியுள்ளார். மேலும் தாவுத் இப்ராஹிம் பற்றிய கேள்விக்கு ''இந்தியா தேடும் குற்றவாளிகளின் பட்டியல் எங்களிடம் உள்ளது. நாங்களும் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கூடாரமாக இருப்பதை விரும்பவில்லை'' என்று கூறியுள்ளார்.

தாவுத் இப்ராஹிம் தான் 1993 குண்டுவெடிப்புகளின் முக்கிய புள்ளி, மும்பையில் வெவ்வேறு இடங்களில் 12 குண்டுகள் வெடித்து 257 பேர் கொல்லப்பட்டனர். 700க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பில் இது சர்வதேச தீவிரவாதமாக பட்டியலிடப்பட்டது.

தாவூத், பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக ஐநாவிடம் இந்தியா புகார் அளித்துள்ளது. அதேபோல் மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஹபிஸ் சையதும் பாகிஸ்தானில் சுற்றி வருவது தெரியவந்துள்ளது. 26/11 மும்பை தாக்குதலுக்கு பிறகு ஹபீஸ், வீட்டு சிறையில் வைக்கப்பட்டார். பின்னர் பாகிஸ்தான் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. 

g0l435kg

தற்போது இம்ரான் கான் இந்திய-பாகிஸ்தான் உறவுகளை விரைவில் மேம்படுத்த வேண்டும். பாராளுமன்ற தாக்குதலுக்கு பிறகு மோதிக் கொண்டிருக்கிறோமே தவிர அமைதி நடவடிக்கைகள் எட்டப்படாமல் உள்ளது. அதையே தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார். 

கார்டர்பூர் காரிடார் துவக்க விழாவில் இம்ரான்கான் '' காஷ்மீர் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும், அதுவே மனிதநேயமிக்கது என்று கூறியுள்ளார். பேச்சுவார்த்தைக்கு முன் சார்க் மாநாட்டுக்கு பிரதமர் மோடியை அழைத்தோம். ஆனால் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 'இந்தியா சார்க் மாநாட்டில் பங்கேற்காது' என அறிவித்துவிட்டார். ஒருவேளை பேச்சுவார்த்தை தாமதமானால் இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மீண்டும் முயற்சிப்போம்" என்று கூறியுள்ளார். 

.