This Article is From Aug 21, 2018

கிருஷ்ணா, கோதாவரி நதியோரம் வெள்ளம்; ஆந்திர அரசுக்கு எச்சரிக்கை

ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுதால், கரையோரம் இருக்கும் மக்களுக்கு அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது

கிருஷ்ணா, கோதாவரி நதியோரம் வெள்ளம்; ஆந்திர அரசுக்கு எச்சரிக்கை
Amaravati:

அமராவதி: ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுதால், கரையோரம் இருக்கும் மக்களுக்கு அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 தினங்களாக கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்களில் பெய்த கனமழையால், ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா, கோதாவரி நதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால், கோதாவரி மாவட்டங்களில் உள்ள 28 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 100 ஏக்கர்களுக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன என்று அரசு அறிவித்துள்ளது.

இதுவரை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2982 மக்கள், கோதாவரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 16 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடன் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கூடுதலாக, மாநில பேரிடர் மீட்பு குழுவும், மருத்துவ குழுவும் வெள்ளம் பாதித்த இடங்களுக்கு விரைந்துள்ளனர். இதனால், மழை பாதித்த மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

.