This Article is From Feb 19, 2020

'அவர் தான் எனக்கு கடவுள்' - அரசுக்கு 'டிரம்ப் கிருஷ்ணா' வைத்த கோரிக்கை

இவர் டிரம்பின் பரம விசிறியாக மட்டும் இல்லாமல், தனது வீட்டின் அருகில் அவருக்கு 6 ஆடியில் ஒரு சிலையும் வைத்து வணங்கி வருகிறார்

'அவர் தான் எனக்கு கடவுள்' - அரசுக்கு 'டிரம்ப் கிருஷ்ணா' வைத்த கோரிக்கை

டிரம்ப் மீது அவர் கொண்டுள்ள அன்பினால் கிராம மக்கள் அனைவரும் அவரை டிரம்ப் கிருஷ்ணா என்று அழைக்கத் தொடங்கினர்

ஹைலைட்ஸ்

  • 'அவர் தான் எனக்கு கடவுள்'
  • அரசுக்கு 'டிரம்ப் கிருஷ்ணா' வைத்த கோரிக்கை
  • கிராம மக்கள் எப்போதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை
Jangaon (Telangana):

விரைவில் அரசு முறை பயணமாக இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-ஐ சந்திக்க தன்னை அனுமதிக்க வேண்டும் என்று, அதிபர் டொனால்டின் உருவத்தை சிலையாக செய்து அதை தினமும் கடவுளை வணங்குவது போல வணங்கி வரும் தெலுங்கானாவை சேர்ந்த புஸ்ஸா கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 

இந்த நிகழ்வு குறித்து ANI செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள அவர், இந்தியா - அமெரிக்கா உறவு நல்லதொரு உறவாக நீடிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் டொனால்ட் டிரம்பிற்காக தான் விரதம் இருந்து அவரை ஒரு கடவுளை போல நினைத்து வழிபடுவதாகவும் கூறியுள்ளார். டிரம்பின் இந்திய வருகையின்போது அவரை சந்திக்கவைத்து தனது கனவை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இவர் டிரம்பின் பரம விசிறியாக மட்டும் இல்லாமல், தனது வீட்டின் அருகில் அவருக்கு 6 ஆடியில் ஒரு சிலையும் வைத்து வணங்கி வருகிறார். தான் வேளைக்கு செல்லும்போது டொனால்ட் டிரம்பின் புகைப்படத்தை தன்னுடனே எடுத்துச் செல்வதாகவும், தனது வீட்டின் அருகில் உள்ள அந்த சிலையை 15 தொழிலார்களை கொண்டு ஒரு மாதத்தில் கட்டி முடித்ததாகவும் அவர் கூறினார்.    

புஸ்ஸா கிருஷ்ணன் என்ற பெயரை அவர் கொண்டிருந்தாலும், டிரம்ப் மீது அவர் கொண்டுள்ள அன்பினால் கிராம மக்கள் அனைவரும் அவரை டிரம்ப் கிருஷ்ணா என்று அழைக்கத் தொடங்கினர். கிருஷ்ணாவின் குடியிருப்பு இங்கு டிரம்ப் ஹவுஸ் என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ணாவின் இந்த செயலுக்கு கிராம மக்கள் எப்போதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை என்றும், மாறாக அவரது பக்தியைப் பாராட்டி வருகின்றனர் என்று புஸ்ஸாவின் நண்பர் ரமேஷ் ரெட்டி கூறினார்.
 

.