This Article is From Jul 21, 2020

காவலர் தற்கொலை தொடர்பாக ராஜஸ்தான் முதல்வரிடம் சிபிஐ விசாரணை!

இந்நிலையில் நேற்று கிருஷ்ணா பூனியாவை நேற்று கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் விசாரித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

காவலர் தற்கொலை தொடர்பாக ராஜஸ்தான் முதல்வரிடம் சிபிஐ விசாரணை!

அசோக் கெஹ்லோட்டின் அரசாங்கம் அரசியல் புயலை எதிர்கொள்ளும் நேரத்தில் சிபிஐயின் விசாரணையையும் எதிர்கொண்டுள்ளது

ஹைலைட்ஸ்

  • விஷ்ணுதுத் விஷ்னோ கடந்த மே 23 அன்று தற்கொலை செய்துக்கொண்டார்.
  • முதல்வரின் சிறப்பு கடமை அதிகாரி தேவா ராம் சைனி விசாரிக்கப்பட்டார்.
  • முதல்வர் அசோக் கெஹ்லோட்டை சிபிஐ இன்று விசாரித்துள்ளது
Jaipur:

ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து வரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் தற்போது, கடந்த மே மாதம் காவல்துறை அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் மரணம் தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட்டை சிபிஐ இன்று விசாரித்துள்ளது. அதே போல நேற்று விசாரிக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ கிருஷ்ணா பூனியாவும் இன்று பிற்பகுதியில் மற்றொரு சுற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் முதல்வரின் சிறப்பு கடமை அதிகாரி தேவா ராம் சைனி ஜெய்ப்பூரில் உள்ள விசாரணை முகமை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டார். இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக நடைபெற்ற விசாரணையில் பெறப்பட்ட தகவல்களை சிபிஐ அதிகாரிகள் அறிக்கையாக பதிவு செய்தனர்.

போலீஸ் அதிகாரியான விஷ்ணுதுத் விஷ்னோ கடந்த மே 23 அன்று சுரு மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்நிலையில் இந்த வழக்கினை ராஜஸ்தான் அரசு கடந்த மாதம் சிபிஐக்கு மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக உயிரிழந்த காவல்துறை அதிகாரியின் சகோதரர் காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று கிருஷ்ணா பூனியாவை கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் விசாரித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

.