This Article is From Sep 01, 2019

2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் சிலை! பக்தி பரவசமூட்டும் அரிய தொகுப்பு!!

பத்ம ஸ்ரீ விருதுபெற்ற பிரபல மருத்துவர் பிரகாஷ் கோத்தாரி, விநாயகர் சிலைகள், ஓவியம், விநாயகர் உருவப்படம் பொறித்த பொருட்களை சேகரித்து அவற்றை காட்சிப்படுத்தியுள்ளார். மிகவும் பழைமை வாய்ந்த விநாயகர் சிலை சீனாவில் இல்லையென்றும் அது தன்னிடம் இருப்பதாகம் அவர் கூறியுள்ளார்.

விநாயகர் கண்காட்சியை மக்கள் ஆர்வமுடன் பார்த்துச்செல்கின்றனர்.

Mumbai:

 

2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த விநாயகர் சிலை மும்பையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமானோர் பக்தி பரவசத்துடன் வந்து பார்த்து விட்டு செல்கின்றனர். 

பிரபல மருத்துவர் பிரகாஷ் கோத்தாரி, விநாயகர் தொடர்பான கலைப் பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் உடையவர். மருத்துவத் துறையில் அவர் சிறந்து விளங்கியதால், மத்திய அரசு அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
 

6j04e6lg


இந்த நிலையில் கோத்தாரி தான் சேகரித்த விநாயகர் தொடர்பான பொருட்களை மும்பையில் காட்சிக்கு வைத்துள்ளார். அவற்றில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட விநாயகர் சிலையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் தொன்மைக்கு தன்னிடம் சான்று உள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். 

கண்காட்சியில் நாணயங்கள், வெளிநாட்டு கரன்சிகள், ஸ்டாம்புகள், வித்தியாசமான நகைப் பெட்டிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 

தெற்கு மும்பை கேலரியில் இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி நாளை தொடங்கவுள்ள நிலையில், நாளையுடன் கண்காட்சி முடித்துக் கொள்ளப்படுகிறது. இதனை காண்பதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

.