This Article is From Jun 27, 2020

இந்தியாவின் 85 சதவீத கொரோனா பாதிப்பு 8 மாநிலங்களில் உள்ளது : மத்திய அரசு

ஒட்டுமொத்த அளவில் நாட்டில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  15,685 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு குணம் அடைந்தவர்களை தவிர்த்து  சுமார் 2 லட்சம்பேர் கொரோனா பாதிப்புக்காக இந்தியாவில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். 

கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. 

ஹைலைட்ஸ்

  • மகாராஷ்டிரா, தமிழகம் உள்பட 8 மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன
  • 85 சதவீத பாதிப்புகள் 8 மாநிலத்தில் மட்டும் இருப்பதாக மத்திய அரசு தகவல்
  • 8 மாநிலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது
New Delhi:

இந்தியாவில்  ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பின் 85 சதவீதம்,  மற்றும் உயிரிழப்புகளின் 87 சதவீதம் 8 மாநிலங்களில் இருப்பதாக  மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய  சுகாதாரத்துறை  முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.  பாதிப்பு அதிகமாக காணப்படும் 8 மாநிலங்களுக்கு உதவி செய்வதற்காக  மத்திய அரசு சார்பில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத், தெலங்கானா, ஆந்திரா, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் ஆகியவைதான் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட 8 மாநிலங்கள் என்று  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதிலும் குறிப்பாக  மகாராஷ்டிராவில் 1.53 லட்சம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இங்கு 7,106 பேர் உயிரிழந்துள்ளனர்.  டெல்லியில் 77,240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  2,492 பேர் உயிரிழந்துள்ளார்கள்.  

ஒட்டுமொத்த அளவில் நாட்டில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  15,685 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு குணம் அடைந்தவர்களை தவிர்த்து  சுமார் 2 லட்சம்பேர் கொரோனா பாதிப்புக்காக இந்தியாவில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். 

கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. 

மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஜூலை 31ம் தேதி வரையில் பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மற்ற மாநிலங்களிலும் பொது முடக்கம் நீட்டிப்பு செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  தேசிய அளவில் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் 58 சதவீதமாக உள்ளனர். 

உயிரிழப்பு 3.08 சதவீதமாக இருக்கிறது. இம்மாத தொடக்கத்தின்போது இறப்பு 2.82 சதவீதமாக இருந்தது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இறப்பு  விகிதம் குறைவாக உள்ளது. 

நாடு முழுவதும் 285 தனியார் உள்பட மொத்தம் 1026 ஆய்வகங்கள் கொரோனா பாதிப்பை கண்டறிய பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2.2 லட்சம் மாதிரிகள் பரிசோதனை  செய்யப்பட்டுள்ளன.  ஒட்டுமொத்தமாக 80 லட்சம் மாதிரிகள் நாட்டில்  பரிசோதிக்கப்பட்டுள்ளது.  

.