திடீர் சோதனை… Chennai Airport-ல் பிடிபட்ட அரியவகை Snakes, Lizards… பகீர் கிளப்பும் பின்னணி!

கடத்தப்பட்ட அரியவகை Snakes, Lizards-ல் பச்சை மர பைத்தான் வகைப் பாம்பு, ஒரு ஸ்கிரப் வகைப் பாம்பு மற்றும் 10 அரிய வகை பல்லிகள் ஆகியவை அடங்கும்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
திடீர் சோதனை… Chennai Airport-ல் பிடிபட்ட அரியவகை Snakes, Lizards… பகீர் கிளப்பும் பின்னணி!

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் 36 வயதாகும் முகமது பர்வேஸ் மற்றும் 28 வயதாகும் முகமது அக்பர் என கண்டறியப்பட்டுள்ளது. 

Chennai: 

அரியவகை பாம்புகள் மற்றும் பல்லிகளை (pythons and lizards) சென்னை விமான நிலையத்திலிருந்து (Chennai Airport) கடத்த நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இது சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடத்தப்பட்ட உயிரினங்களில் பச்சை மர பைத்தான் வகைப் பாம்பு, ஒரு ஸ்கிரப் வகைப் பாம்பு மற்றும் 10 அரிய வகை பல்லிகள் ஆகியவை அடங்கும்.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் 36 வயதாகும் முகமது பர்வேஸ் மற்றும் 28 வயதாகும் முகமது அக்பர் என கண்டறியப்பட்டுள்ளது. 

மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சில அரியவகை உயிரனங்கள் சென்னைக்குள் கடத்த முயற்சி எடுக்கப்பட்டதாக அந்நாட்டு விமானநிலைய அதிகாரிகள், இந்திய அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து நடந்த சோதனையில்தான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. 

“கோலாலம்பூருக்கு வெளியே இருக்கும் சிலர், உயிரினங்கள் அடங்கியை பையை தங்களுக்குக் கொடுத்ததாகவும், அதை சென்னை விமான நிலையத்துக்கு வெளியே இருக்கும் சிலரிடம் கொடுக்கச் சொல்லிப் பணிக்கப்பட்டதாகவும் பிடிபட்ட நபர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்” என்று கஸ்டம்ஸ் துறையினர் கூறியுள்ளனர். 

பிடிபட்ட உயிரினங்கள் மீண்டும் மலேசியாவுக்கேத் திரும்ப அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................