
டாய்லெட்டுக்குள் பாம்பு இருக்கும் வீடியோ
அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், டாய்லெட்டுக்குள் பாம்பு புகுந்த வீடியோ வைரலாகியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள டெக்ஸஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் கன் வெஸ்ட. இவர் வழக்கம் போல் தனது வீட்டில் கழிப்பறைக்குள் சென்றார். அப்போது டாய்லெட்டில் ஏதோ வித்தியாசமாக ஒன்று நெளிந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். பின்னர், உற்று நோக்கியப் பிறகு தான் அது பாம்பு என்பது தெரியவந்தது.
இதனையடுத்து தனது நண்பர் பேட்டன் மலான் என்பவரை அழைத்து பாம்பு இருப்பதைக் காண்பித்தார். பின்னர், டாய்லெட்டுக்குள் இருந்த பாம்பு லாவகமாக வெளியே எடுக்கப்பட்டது.
மேலும், டாய்லெட்டுக்குள் பாம்பு இருப்பதை அப்படியே வீடியோ எடுத்த அவர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். வெறும் 29 நொடிகள் மட்டும் ஓடக்கூடிய இந்த வீடியோ, பதிவிட்ட இரண்டு நாளில் 2.3 மில்லியன் பார்வைகளைப் பெற்றது.
டாய்லெட்டுக்குள் பாம்பு இருக்கும் வீடியோ:
I always thought this was an irrational fear of mine...apparently not. Friend out in west Texas found this. ???????????? pic.twitter.com/jd23gbLkGF
— Payton Malone WWL-TV (@paytonmalonewx) August 16, 2020
கடந்த திங்களன்று டுவிட்டரில் இந்த வீடியோ வெளியானது. அடுத்த இரண்டு நாட்களில் சுமார் 2.3 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரீடுவீட் செய்துள்ளனர்.