This Article is From Jun 11, 2019

உயிரிழந்த யானைக்குட்டிக்கு ‘இறுதி ஊர்வலம்’: சோகத்துடன் சென்ற யானைக்கூட்டம்! #உருக்குமான வீடியோ

மனிதர்கள் மட்டுமல்ல பல நேரங்களில் மிருகக் கூட்டங்களும், தங்கள் கூட்டத்தில் இறந்த மிருகங்களுக்காக அதிகமாக வருந்துவதைப் பார்க்க முடியும் என்று சொல்லப்படுகிறது.

உயிரிழந்த யானைக்குட்டிக்கு ‘இறுதி ஊர்வலம்’: சோகத்துடன் சென்ற யானைக்கூட்டம்! #உருக்குமான வீடியோ

இந்த வீடியோவை ஐ.எப்.எஸ் அதிகாரி பிரவீன் கஸ்வான், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

New Delhi:

யானைகளுக்கு அசாத்திய ஞாபக சக்தி இருக்கும் என்பது பலருக்குத் தெரியும். ஆனால், அவைகளுக்கு மனிதர்களைப் போலவே பல வித உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரியும் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ ஆன்லைனில் வைரலாகி வருகிறது. உயிரிழ்ந்த யானைக்குட்டி ஒன்றின் ‘இறுதி ஊர்வலத்தில்' சோகம் ததும்ப செல்லும் யானைக்கூட்டமே அந்த உணர்வு வெளிப்பாட்டுக்கு சாட்சி.

இந்த வீடியோவை ஐ.எப்.எஸ் அதிகாரி பிரவீன் கஸ்வான், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வீடியோவில் யானை ஒன்று, உயிரிழ்ந்த யானைக்குட்டியின் உடலை சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொருப் பக்கத்துக்கு எடுத்துச் செல்கிறது. ஒர் இறந்த குட்டியின் உடலை யானைகள் இப்படி எடுத்துச் செல்வதை மக்கள் பலர் தூரத்தில் இருந்து பார்ப்பதும் தெரிகிறது. இறந்த யானைக்குட்டியின் இறுதி ஊர்வலம் போலவே இது தெரிகிற

இந்த சம்பவம் குறித்து ஐ.எப்.எஸ் அதிகாரி பிரவீன் கஸ்வான், “யானைகளுக்கென்று தனியாக கல்லறைகள் இருக்கும் என்று நான் பழங்கால கதைகளைக் கேட்டிருக்கிறேன். அது குறித்து பலரும் எழுதியுள்ளனர். ஆனால், அதற்கு ஆதரமாக இதுவரை எதவும் கிடைக்கவில்லை. ஆனால் யானைகள், நீர் நிலைகளுக்கு அருகில் இறக்கவே விரும்புகின்றன” என்று பதிவிட்டுள்ளார். 

மனிதர்கள் மட்டுமல்ல பல நேரங்களில் மிருகக் கூட்டங்களும், தங்கள் கூட்டத்தில் இறந்த மிருகங்களுக்காக அதிகமாக வருந்துவதைப் பார்க்க முடியும் என்று சொல்லப்படுகிறது. இந்த யானைக்குட்டி இறுதி ஊர்வலம் சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை என்றாலும், அது குறித்து ஆன்லைனில் பலரும் விவாதித்து வருகின்றனர். 

.