இந்தப் படத்தில் எத்தனை யானைகள் இருக்குது தெரியுமா?- வீடியோவைப் பார்த்தா ஆச்சரியப்படுவீங்க!

இந்தப் படத்தில் ஒரே காட்சியில் நான்கு யானைகள் இருப்பதாகத் தோன்றும். ஆனால், எத்தனை உள்ளது தெரியுமா?

இந்தப் படத்தில் எத்தனை யானைகள் இருக்குது தெரியுமா?- வீடியோவைப் பார்த்தா ஆச்சரியப்படுவீங்க!

எத்தனை யானைகள் உள்ளன தெரியுமா?

கண்ணால் பார்ப்து பொய், காதால் கேட்பது பொய் என்பார்கள். உண்மையில் அப்படியான வீடியோ ஒன்றுதான் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு வைலடு லென்ஸ் சூழலியல் அறக்கட்டளை என்ற அமைப்பு, யானைகள் தண்ணீர் குடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டது. இதில் என்ன ஆச்சரியம் உள்ளது என்று பார்வையாளர்கள் முதலில் எண்ணினர். பின்னர், அந்தப் படம் சார்ந்த வீடியோவைப் பார்த்த போதுதான் விஷயமே புரிந்தது. 

வீடியோவின் ஒரு ஃபிரேமை மட்டும் போட்டோவாக அறக்கட்டளை நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதைப் பார்க்கும் போது அடுத்தடுத்து 4 யானைகள் வரிசையாக நின்று தண்ணீர் குடிக்கின்றன என்றுதான் தோன்றும். எவ்வளவு உற்றுப் பார்த்தாலும் அதற்கு மேல் அதில் ஒன்றுமில்லை என்பது போல்தான் இருந்தது. 

பின்னர், வீடியோவைப் பார்க்கும் போது, ஒவ்வொரு யானைக்கும் நடுவிலும் மற்றொரு யானைக்கன்று இருப்பது தெரியவந்தது. யானைகள் தண்ணீர் குடித்தப் பின் அங்கிருந்து நகர்ந்து செல்லும் போதுதான், உண்மையிலேயே அங்கு மொத்தம் எத்தனை யானைகள் நின்றன என்பது தெரியவருகிறது. 

நமது பார்வைக்கு 4 யானைகள் தெரிந்ததாக குறிப்பிட்டோம். ஆனால், அந்த இடத்தில் மொத்தம் 7 யானைகள் இருந்தன. வைலடு லென்ஸ் வெளியிட்டுள்ள அந்த வீடியோ:

இந்த வீடியோ டுவிட்டர் ஒரே நாளில் 2,500 பார்வைகளைப் பெற்றன. மேலும், பலரும் இதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால், அதில் 7 யானைகள் நிற்பது யார் கண்ணிற்கும் தெரியவில்லை. 

இந்த வீடியோவில் எத்தனை யானைகள் உள்ளன? உங்களால் எண்ண முடிகிறதா?

Click for more trending news