This Article is From May 29, 2019

மாற்றுத் திறனாளி 'டெலிவரி மேன்'-க்கு இப்படியொரு பரிசா..?- நெகிழும் ட்விட்டர்!

சமூகவலைதளத்தில் பலர் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

மாற்றுத் திறனாளி 'டெலிவரி மேன்'-க்கு இப்படியொரு பரிசா..?- நெகிழும் ட்விட்டர்!

ராமு சாகு அந்த வாகனத்தை ஓட்டுகிறார்

சமூகவலைதளத்தில் நெகிழ்ச்சியான நிகழ்வு ஒன்று வைரல் ஆகியுள்ளது. இந்த மாதம் துவக்கத்தில் ராஜஸ்தானின் பேவரை சேர்ந்த ஜோமாட்டோவிற்காக வேலை செய்யும் மாற்றுதிறனாளியான ராமு சாகு கைகளால் ஓட்டும் டிரைசைக்கிளில் உணவை டெலிவரி செய்யும் வீடியோ வைரல் ஆனது. இதனையடுத்து பல மக்கள் அந்த மாற்றுதிறனாளிக்கு எலக்ட்ரிக் வாகனம் வழங்க கோரிக்கை வைத்தனர்.

மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்த ஜோமாட்டோ நிறுவனம், ராமு சாகுக்கு எலக்ட்ரிக் சைக்கிள் வழங்கியுள்ளனர். இதனை ஜோமாட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

கோயல் கூறுகையில், ‘எங்கள் தொழிலாளர் ராமு சாகு எலக்ட்ரிக் வாகனத்தை ஏற்றுகொண்டார். எங்களுக்கு அது மகிழ்ச்சியை தந்துள்ளது' என்றார்.

ராமு சாகு அந்த வாகனத்தை ஓட்டும் வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இதற்கு சமூகவலைதளத்தில் பலர் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

Click for more trending news


.