மதுபானங்களை வீட்டில் டெலிவரி செய்ய ஆரம்பித்தது Swiggy, Zomato!

Swiggy, Zomato liquor delivery: உணவு டெலிவரிதான் இரு நிறுவனங்களுக்கும் பிரதானம் என்றாலும், கடந்த இரு மாதங்களாக பெரும்பான்மையான உணவகங்கள் செயல்படவில்லை.

மதுபானங்களை வீட்டில் டெலிவரி செய்ய ஆரம்பித்தது Swiggy, Zomato!

Liquor Delivery: பல நகரங்களில் மதுபானங்களை டெலிவரி செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன

ஹைலைட்ஸ்

  • மார்ச் 25 முதல் இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது
  • அப்போது முதல் மதுபானக் கடைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது
  • சில நாட்களுக்கு முன்னர்தான் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன
Bengaluru:

இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ, இன்று முதல் சில நகரங்களில் வீட்டிலேயே மதுபானங்களை டெலிவரி செய்ய ஆரம்பித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் மதுபானங்களுக்கானத் தேவை அதிகரித்துள்ள நிலையில் அந்த வாய்ப்பை இரு நிறுவனங்களும் பயன்படுத்த உள்ளன. 

மார்ச் 25 ஆம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மதுபானக் கடைகளையும் மூட உத்தரவிட்டது மத்திய அரசு. சில நாட்களுக்கு முன்னர்தான் அவற்றுக்குத் தளர்வு அளிக்கப்பட்டது. 

பல நாட்களுக்குப் பிறகு அரசு, மதுபானக் கடைகளைத் திறந்தவுடன், அங்கு கூட்டம் அலைமோதியது. இதனால் பல இடங்களில் ‘குடிமகன்களை' லத்தி சார்ஜ் செய்து சலசலப்பை அடக்கியது போலீஸ். 

முதலாவதாக ஜார்காண்ட் மாநிலத்தின் தலைநகரமான ராஞ்சியில் மதுபானங்களை வீட்டிலேயே டெலிவரி செய்யும் சேவையை ஆரம்பித்துள்ளதாக ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

Newsbeep

பல நகரங்களில் மதுபானங்களை டெலிவரி செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. மதுபானங்களை வீட்டில் டெலிவரி செய்வதனால் சமூக விலகல் கடைபிடிக்கப்படும் என்று இரு நிறுவனங்களும் தனித் தனி அறிக்கைகள் மூலம் தெரிவித்துள்ளன. 

உணவு டெலிவரிதான் இரு நிறுவனங்களுக்கும் பிரதானம் என்றாலும், கடந்த இரு மாதங்களாக பெரும்பான்மையான உணவகங்கள் செயல்படவில்லை. இதனால், தங்களின் வருவாயின் பெரும் பங்கை இரு நிறுவனங்களும் இழந்தன. இதைத் தொடர்ந்து இரு நிறுவனங்களும் பல ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. 


 (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)