This Article is From Sep 19, 2020

மாற்றுத் திறனாளியை புஷ் அப்ஸ் எடுக்க வைத்த காவலர் மீது பணி இடைநீக்க நடவடிக்கை!!

பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியை போல இடை நீக்கம் செய்யப்பட்ட காவலரும், மாற்றுத் திறனாளி மீது தன்னை இழிவாக நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மாற்றுத் திறனாளியை புஷ் அப்ஸ் எடுக்க வைத்த காவலர் மீது பணி இடைநீக்க நடவடிக்கை!!
Lucknow:

உத்தர பிரதேச மாநிலத்தில் மாற்றுத் திறனாளி ஒருவரை புஷ் அப்ஸ் எடுக்க வைத்த காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவிலிருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள கனுஜ் மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய வளாகத்தில் மாற்றுத் திறனாளி ஒருவரை காவலர் ஒருவர் புஷ் அப்ஸ் எடுக்க வைத்துள்ளார்.

ரிக்சா ஓட்டும் தொழிலாளியான மாற்றுத் திறனாளி பயணிகளை தனது வண்டியில் ஏற்றியதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார். காவலர் அவரை பின் மண்டையில் அறைந்ததாகவும் பின்னர் புஷ் அப்ஸ் எடுக்க வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலானதையடுத்து காவலர் மீது இடை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அம்மாவட்ட எஸ்.பி அமரேந்திர பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், காவலர்கள் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும், காவலர்கள் எந்த மன நிலையில் இருந்தாலும் பொது மக்களை இழிவாக நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியை போல இடை நீக்கம் செய்யப்பட்ட காவலரும், மாற்றுத் திறனாளி மீது தன்னை இழிவாக நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

.