This Article is From Mar 17, 2019

கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் காங்கிரஸ்! - ஆளுநருக்கு கடிதம்

பாஜக ஆட்சியை டிஸ்மிஸ் செய்துவிட்டு தனிபெரும் கட்சியான எங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநருக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

Manohar Parrikar: மனோகர் பாரிக்கர் உடல்நிலை மோசமடைந்து வருவதை தொடர்ந்து காங்கிரஸ் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • பாஜக எம்.எல்.ஏ. உயிரிழந்ததை தொடர்ந்து சட்டப்பேரவையில் ஆதரவு குறைந்துள்ளது
  • பா.ஜ.க.வின் எண்ணிக்கை குறைந்து போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
  • பாஜகவை விட அதிகமான எம்.எல்.ஏக்களை காங். கொண்டுள்ளது
Panaji:

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் (Manohar Parrikar) உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் மிருதுளா சின்ஹாவுக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் ஆளுநருக்கு அளித்த அந்த கடிதத்தில், பாஜக தலைமையிலான கூட்டணி அரசு சிறுபான்மையாக உள்ளது என்றும் அதன் எண்ணிக்கை மேலும், குறைய வாய்ப்புள்ளது.

இதனால், பாஜக ஆட்சியை டிஸ்மிஸ் செய்துவிட்டு, மாநிலத்தில் தனி பெரும்பான்மையுடன் இருக்கும் காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கோவாவின் முன்னாள் துணை முதல்வரான பாஜக எம்.எல்.ஏ. பிரான்சிஸ் டிசோசா (64) கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி உயிரிழந்தார்.

ஏற்கனவே மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்த பாஜக அரசு, தற்போது சட்டப்பேரவையில் அதன் பலத்தையும் இழந்துள்ளது. இதனால் கோவா சட்டப்பேரவையில் பாஜக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 13ஆகக் குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் குறைய வாய்ப்புள்ளது என்பதாலும், பெரும்பான்மை இல்லாத இந்த ஆட்சி நீடிக்க கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கோவா முதல் மனோகர் பாரிக்கர் (Manohar Parrikar) உடல்நிலை மோசமடைந்து விட்டது என்றும் அவர் கடைசி கட்டநிலையில் இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியானது.

இதைத்தொடர்ந்து, முதல்வர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு அவரது வீட்டில் வைத்தே தொடர் சிகிச்சைகள் நடந்து வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தசூழலில், கோவாவின் முன்னாள் துணை முதல்வரும், பாஜக எம்.எல்.ஏ.வுமான பிரான்சிஸ் டிசோசா கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் கோவா சட்டப்பேரவையில் பாஜக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 13ஆகக் குறைந்தது. அதேநேரத்தில் காங்கிரசுக்கு 14 எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் உள்ளனர். 40 தொகுதிகள் கொண்ட கோவா சட்டப்பேரவையில், தற்போது 3 தொகுதிகள் காலியாக உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் ஐஏஎன்எஸ்-க்கு அளித்த பேட்டியில், ஆளுநரால், சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் நடைபெற்றால், முதல்வர் மனோகர் பாரிக்கரின் (Manohar Parrikar) உடல்நிலை காரணமாக அவரால் பங்கேற்க முடியாது. இதனால், பாஜக மேலும் பலவீனமாகும். அதேநேரத்தில் காங்கிரசுக்கு 14 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதுபோக பாஜக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், பாஜக கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெற்று காங்கிரசுடன் இணைய வலியுறுத்தி வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

.