This Article is From May 20, 2020

மாலை 4 முதல் 6 மணிக்குள் கரையைக் கடக்கும் ஆம்பன் புயல்! முக்கியத் தகவல்கள்!!

ஒடிசா மற்றும்  மேற்குவங்கம் ஆகியவை கொரோனா தொற்று மற்றும் ஆம்பன் புயல் என இரு சவால்களை எதிர்கொண்டுள்ளது. அதே போல பேரிடர் மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தனி மனித இடைவெளியை கடை பிடிக்க வேண்டும் என்றும், 1000 பேரை தங்க வைப்பதற்கான முகாம்களில் 500 பேரை தங்க வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை தலைவர் எஸ்.என். பிரதான் தெரிவித்துள்ளார்.

மாலை 4 முதல் 6 மணிக்குள் கரையைக் கடக்கும் ஆம்பன் புயல்! முக்கியத் தகவல்கள்!!

இன்று மாலை கரையை கடக்கிறது ஆம்பன்

New Delhi:

மிகக் கடுமையான புயலாக வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல் இன்று மாலை வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கத்திற்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் உருவான இந்த புயல் வலுவிழந்து தற்போது கரையை கடக்க தயாராகி வருகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக மூன்று லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக வங்கதேசம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலின் கடுமையான புயலில் ஒன்றான ஆம்பன் புயல் மேற்கு வங்கத்தின் திகா மற்றும் பங்களாதேஷின் ஹதியாவைக் கடக்கும்போது மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்கத்தின் "ரெட் பிளஸ் மண்டலங்களை" மாநிலம் அதிக கவனத்தோடு கண்காணிக்கும் என்றும், தான் கட்டுப்பாட்டு அறையில் தங்குவதாக, புயல் கட்டுபாட்டு மையத்திற்கு சென்ற அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
 

  • அதேபோல கடற்கரைக்கு அருகில் வசிக்கக்கூடிய மீனவர்கள் கடலுக்கோ, அல்லது குடியிருப்புப் பகுதிக்கு வெளியேவோ செல்லக்கூடாது என மாநில முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். நிலைமை சீரடைந்ததாக அறிவிக்கப்படும் வரை மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வரவேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த புயலின் முடிவு மோசமானதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதே போல பானி புயல் தாக்கத்தின் போதும் அதிக உயிர் சேதங்கள் ஏற்பட்டன.
  • தற்போது நாட்டின் இரு மாநிலங்கள், அதாவது ஒடிசா மற்றும்  மேற்குவங்கம் ஆகியவை கொரோனா தொற்று மற்றும் ஆம்பன் புயல் என இரு சவால்களை எதிர்கொண்டுள்ளது. அதே போல பேரிடர் மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தனி மனித இடைவெளியை கடை பிடிக்க வேண்டும் என்றும், 1000 பேரை தங்க வைப்பதற்கான முகாம்களில் 500 பேரை தங்க வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை தலைவர் எஸ்.என். பிரதான் தெரிவித்துள்ளார்.
  • எவ்வித அவசர சூழலையும் எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவின் நாற்பது குழுக்கள் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போதும் நாம் கொரோனா தொற்றுடன் இந்த புயல் சாவலையும் எதிர் கொண்டிருக்கிறோம் என பிரதான் தெரிவித்திருந்தார்.
  • இந்த புயலானது படிப்படியாக வலுவிழந்து வருவதால்,  தற்போதைய நிலையில் ஒடிசாவுக்கு அதிக பாதிப்பு இல்லை என இந்திய வானிலை ஆய்வு இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹாபத்ரா தெரிவித்தார். இருப்பினும், கடலோர மாவட்டங்களான ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, பத்ரக் மற்றும் பாலசோர் ஆகியவை பலத்த மழையால் அதிவேக காற்றுடன் சேதமடைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
  • நேற்று மேற்குவங்க மற்றும் ஒடிசா முதல்வர்களுடன் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என ஆதரவு தெரிவித்திருந்தார்.
  • புயல் கரையை கடக்கும் நேரத்தில் பொருட்கள் காற்றி துக்கி வீசப்படவும், அதேபோல மின்கம்பங்கள் முறிந்து விழுவதற்கும், படகுகள் சேதமாவதற்கும் வாய்ப்புகள் உள்ளது என வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை கூறுகிறது. மேலும், அலைகள் ஆறு மீட்டர் உயரத்திற்கு மேலெழும் என்பதால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குவதற்கும் வாய்ப்பிருப்பதாக கூறுகிறது.
  • முன்னதாக புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு புலம் பெயரச் செய்தல் போன்ற நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை கூட்டத்தினை நடத்தினார். மத்திய அரசின் ஆதரவுகள் மாநிலங்களுக்கு உள்ளதாகவும், மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் என்றும், இந்த கலந்தலோசனைக்கு பிறகு பிரதமர் டிவிட் செய்திருக்கிறார்.
  • இதே போல கடந்த ஆண்டு ஒடிசா பான் புயலை சரியாக கையாண்டது. இந்நிலையில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் வெறியேற்றப்படுவதற்கு தயாராக இருக்கிறார்கள் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
  • விசாகப்பட்டினத்தின் டப்ளர் ரேடார் மூலம் கண்காணிக்கப்படும் இந்த புயலுக்கு தாய்லாந்து ஆம்பன் என பெயர் சூட்டியுள்ளது.

.