This Article is From Aug 13, 2020

வைரஸ் தொடர்பை கண்டறிய நோயாளிகளின் அழைப்பு பதிவுகளை சோதிக்கும் கேரள காவல்துறை!

Kerala COVID-19: இதுபோன்ற சேகரிக்கும் தகவல்கள் வெளியில் யாருக்கும் தெரிவிக்கப்படாது. வேறு எந்த காரணத்திற்காகவும் பயன்படுத்தப்படாது என்று அவர் தெரிவித்துள்ளார். 

வைரஸ் தொடர்பை கண்டறிய நோயாளிகளின் அழைப்பு பதிவுகளை சோதிக்கும் கேரள காவல்துறை!

வைரஸ் தொடர்பை கண்டறிய நோயாளிகளின் அழைப்பு பதிவுகளை சோதிக்கும் கேரள காவல்துறை!

Thiruvananthapuram:

கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பை துள்ளியமாக கண்டறிய நோயாளிகளின் தொலைபேசி அழைப்பு பதிவுகளை போலீசார் சோதனையிடுவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

இந்த தகவல்கள் வேறு எதற்கும் பயன்படுத்தப்படாது என்றும், நோயாளின் தனிப்பட்ட உரிமையில் தலையிட மாட்டார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். 

இதுதொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் கூறும்போது, கொரோனா நோயாளிகளின் தொலைபேசி அழைப்பு பதிவு தகவல்களை சோதனையிட மாநில போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமலாத்துறை பிரிவும் இந்த தகவல்களை பெற்று கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் நோயாளிகளின் விவரத்தை கண்டறியவும், பொதுமக்கள் மக்கள் நலனுக்காவும், பாதுகாப்புக்காவும் பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

அவரது தினசரி செய்தியளார்கள் சந்திப்பில், தொடர்பை கண்டறிய இதுவே சிறந்த வழி என்றும், கடந்த சில மாதங்களாக பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

இதுபோன்ற சேகரிக்கும் தகவல்கள் வெளியில் யாருக்கும் தெரிவிக்கப்படாது. வேறு எந்த காரணத்திற்காகவும் பயன்படுத்தப்படாது என்று அவர் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதுமையான வழிமுறைகள் வெவ்வேறு மாவட்ட காவல்துறைத் தலைவர்களால் வகுக்கப்படுகின்றன என்பதைக் குறிப்பிட்டுள்ள அவர், இதுபோன்ற நடவடிக்கைகள் பரஸ்பரம் பகிரப்படும் என்றும் தேவையான மாற்றங்களைச் செய்த பின்னர் மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.
 

.