இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27.02 லட்சத்தை கடந்தது; 51,797 பேர் உயிரிழப்பு!

Coronavirus Recovery Rate: இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 19.77 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைபவர்களின் விகிதமானது 73.18 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27.02 லட்சத்தை கடந்தது; 51,797 பேர் உயிரிழப்பு!

அதிகம் பாதிப்பு உள்ள மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 8,493 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

New Delhi:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55,079 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 876 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 27.02 லட்சத்தை கடந்துள்ளது என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 19.77 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைபவர்களின் விகிதமானது 73.18 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

நாட்டில் அதிகம் பாதிப்பு உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அதைத்தொடர்ந்து, தமிழகம் (3,43,945), ஆந்திர பிரதேசம் (2,96,609), கர்நாடகா (2,33,283), உத்தர பிரதேசம் (1,58,216), டெல்லி (1,53,367) உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. நாட்டில் பாதிப்பு ஏற்பட தொடங்கி 201 நாட்களில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,02,742 ஆக உயர்ந்துள்ளது. 

அதிகம் பாதிப்பு உள்ள மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 8,493 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 6 லட்சத்தை கடந்துள்ளது. 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,890 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 120 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கிட்டதட்ட 5 மாதங்களுக்கு பின்னர் 800 மதுக்கடைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் தினமும் 500 டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது போன்றவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டாஸ்மாக் திறக்கும் அரசின் முடிவுக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இது சென்னையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,000 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 

ஆந்திராவில் ஒரே நாளில் 6,780 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 2.96 லட்சமாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, ஒரே நாளில் 82 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கையும் 2,732 ஆக அதிகரித்துள்ளது. 

Newsbeep

கர்நாடகாவில் 6,317 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 115 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெங்களூரில் மட்டும் அதிக அளவாக 91,000 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் எடியூரப்பா, எதிர்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில சுகாதார அமைச்சர் ஸ்ரீராமலு உள்ளிட்டோரும் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 1.53 லட்சமாக அதிகரித்துளது. இதுவரை அங்கு 4,214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 787 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 பேர் உயிரிழந்துள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழகம் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அதிகளவிலான கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 

இதுவரை 3,09,41,264 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 8.99 லட்சம் மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.