This Article is From Mar 20, 2020

''காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்'' : மோடி

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு கடந்த சில வாரங்களாக தீவிரமாக்கியுள்ளது. இந்தியாவின் முன்னெச்சரிக்கை திட்டங்களை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது.

''காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்'' : மோடி

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

ஹைலைட்ஸ்

  • மத்திய மாநில அரசுடன் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்கிறார் மோடி
  • இனிமேல்தான் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்
  • தவிர்க்க முடியாத தேவை ஏற்பட்டால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்
New Delhi:

கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, இனிமேல்தான் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், ஞாயிறு முதற்கொண்டு மிக அவசியம் ஏற்பட்டாலன்றி, காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். 

பிரதமர் மோடி தனது உரையில் கூறியிருப்பதாவது-

கொரோனா அச்சுறுத்தல் ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் ஆபத்தில் தள்ளியுள்ளது. கடந்த 2 மாதங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுகிற செய்தியைத்தான் பார்த்து வருகிறோம்.

தற்போது வரைக்கும் கொரோனா வைரஸை எதிர்கொண்டு, அதனை குணப்படுத்தும் மருந்து எதையும் அறிவியல் கண்டுபிடிக்கவில்லை. தடுப்பு ஊசிகளும் உருவாக்கப்படவில்லை. இத்தகைய சூழல் இயற்கையாகவே நமக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.

கடந்த 2 நாட்களை பார்க்கும்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறைந்திருக்கிறது என்றே எண்ணத் தோன்றும். ஆனால் அந்த நம்பிக்கை உண்மையல்ல. இனிமேல்தான் ஒவ்வொரு இந்தியரும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

இந்தியா வளர்ந்து வருகிற அதே நேரம் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. இங்கு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் என்பது நம் அனைவருக்கும் மிகப்பெரும் சவால். இது சாதாரண சூழல் அல்ல. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. சர்வதேச அச்சுறுத்தலான கொரோனாவை எதிர்கொள்ள, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தல்களை மக்கள் அவசியம் கேட்டு அதன்படி நடக்க வேண்டும். 

நாமும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் கொரோனா அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க முடியும். ஞாயிறன்று காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். மிகுந்த அவசியம் ஏற்பட்டாலே தவிர மற்ற எதற்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். 

பல நாடுகள் முதல் மற்றும் 2-ம் உலகப்போரில் சந்தித்ததை விட பெரிய இழப்புகளை கொரோனாவால் சந்தித்துள்ளன. 

130 கோடி இந்தியர்களும் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர். அவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்கின்றனர். சில நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடிமக்களை கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்தி வருகின்றன. இதற்கு ஒத்துழைப்பு தரும் குடிமக்களை பாராட்ட வேண்டும். 

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாள்தோறும் அதிகரிக்கும் இந்த அச்சுறுத்தலை நாம் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது என்று எண்ணுவது தவறு. 

கொரோனா பாதிப்பு வந்ததை சரி செய்வது; வராமல் தடுப்பது என 2 பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 

.