This Article is From Jun 10, 2020

ம.பியில் நகைக்கடை, வங்கிகளில் 30 நொடிகளுக்கு முகக்கவசத்தை அகற்ற வேண்டும்! - காவல்துறை

COVID-19 lockdown: தொற்றுநோயால் நாட்டின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான ஏழாவது மாநிலம் மத்தியப் பிரதேசமாகும்.

ம.பியில் நகைக்கடை, வங்கிகளில் 30 நொடிகளுக்கு முகக்கவசத்தை அகற்ற வேண்டும்! - காவல்துறை

ம.பியில் நகைக்கடை, வங்கிகளில் 30 நொடிகளுக்கு முகக்கவசத்தை அகற்ற வேண்டும்! - காவல்துறை

ஹைலைட்ஸ்

  • The move aims to strengthen security at these places
  • Madhya Pradesh is the seventh worst-hit state in India by the pandemic
  • The use of masks is mandatory at public places
Bhopal:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் வங்கிகள், நகைக் கடைகளுக்கு வருகை தருபவர்களை அடையாளம் காணும் விதமாக புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிசிடிவி கேமராக்கள் மூலம் புகைப்படம் எடுக்கக்கூடிய வகையில் 30 விநாடிகளுக்கு முகக்கவசங்களை அகற்ற வேண்டுமென மாநில காவல்துறை வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அதே நேரத்தில் பொது இடங்களில் முகக்கவசங்களின் பயன்பாடு என்பதும் கட்டாயமாக உள்ளது. 

நகைக்கடைகள், வங்கிகளில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்திற்காக இந்த நடவடிக்கை கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவர் கூறும்போது, "இது ஒரு நல்ல நடவடிக்கை, இது குற்ற விகிதத்தைக் கட்டுப்படுத்த உதவும். யாராவது முகக்கவசத்துடன் வங்கியில் நுழைந்தால், அந்த நபரை அடையாளம் காண்பது கடினம்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இரண்டு மாதங்களுக்கும் மேலாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை, "அன்லாக் 1" நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் வழிபாட்டுத் தலங்கள், மால்கள் மற்றும் உணவகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

மத்திய பிரதேசத்தில், கடந்த மாதம் தனித்திருக்கும் கடைகளை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தாலும், மால்களில் உள்ள கடைகளும் மீண்டும் செயல்படத் தொடங்கின. இந்த இரண்டு மாதங்களில் அரசு மற்றும் தனியார் - வங்கிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன, மார்ச் மாதத்தில் உலகின் கடுமையான ஊரடங்கில் ஒன்றை அரசு அறிவித்தது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக பொது இடங்களில் முகக்கவசங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாகும், இது பிற நடவடிக்கைகளுக்கிடையில் சமூக விலகலையும் வலியுறுத்துகிறது. "முகக்கவசம்/ முகக்கவசங்களை பயன்படுத்தினால் மட்டுமே அனைத்து தொழிலாளர்கள்/வாடிக்கையாளர்கள்/பார்வையாளர்கள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். முகக்கவசங்கள் எல்லா நேரங்களிலும் அணியப்பட வேண்டும்" என்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மால்களுக்கான வழிகாட்டுதல்களில் உள்ளன.

கையால் உருவாக்கப்பட்ட முகக்கவசங்ளைப் பயன்படுத்தவும் அரசு பரிந்துரைத்துள்ளது. "மருத்துவ நிலைமைகளால் பாதிக்கப்படாதவர்கள் அல்லது சுவாசக் கோளாறுகள் இல்லாதவர்கள் கையால் மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களை பயன்படுத்தலாம், குறிப்பாக அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது. இது சமூகத்தை பெருமளவில் பாதுகாக்க உதவும்" என்று ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.

தொற்றுநோயால் நாட்டின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான ஏழாவது மாநிலம் மத்தியப் பிரதேசமாகும். இதுவரை 10,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 400க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிரிழந்ததாகவும் அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

.