This Article is From May 18, 2020

டெல்லியில் குறைந்த பயணிகளுடன் பஸ், ஆட்டோ, டாக்ஸி இயங்குவதற்கு அனுமதி!!

கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த பகுதிகளில் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தை சென்னை உள்பட சில பகுதிகளை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் சலூன் கடைகள் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.

டெல்லியில் குறைந்த பயணிகளுடன் பஸ், ஆட்டோ, டாக்ஸி இயங்குவதற்கு அனுமதி!!

கட்டுப்பாடு தளர்வு தொடர்பான புதிய அறிவிப்புகளை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • கொரோனா பாதிப்பு குறைந்த இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.
  • டெல்லியில் கார், பஸ், டாக்சி குறைந்த பயணிகளுடன் இயங்க அனுமதி
  • கட்டுப்பாடு தளர்வுகள் குறித்த மற்ற விவரங்களை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது
New Delhi:

டெல்லியில் குறைந்த பயணிகளுடன் பேருந்து, ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்டவை மீண்டும் இயங்க அனுமதி அளித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்த உத்தரவுப்படி, ஆட்டோவில் ஒரேயொரு பயணி மட்டுமே இருக்க வேண்டும். டாக்ஸியில் 2 பயணிகள் செல்லலாம். பேருந்துகளில் அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

புதிய அறிவிப்புப்படி தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் விவரம்

* அலுலகங்கள் திறக்க அனுமதி
* கார்களை ஷேரிங் செய்து கொள்ள அனுமதியிலை
* இருசக்கர வாகனங்களில் பின்னிருக்கையில் அமர அனுமதியில்லை
* தனியாக அமைக்கப்பட்டிருக்கும் கடைகள் செயல்பட அனுமதி.
* கட்டுமான தொழில்கள் செயல்பட அனுமதி
* அதிகபட்சமாக 50 பேருடன் திருமணம் நடத்த அனுமதி.
* துக்க நிகழ்வில் 20 பேருக்கும் அதிகமானோர் இருக்க கூடாது
* ஓட்டல்கள், தியேட்டர், ஷாப்பிங் மால்கள், ஜிம், நீச்சல் குளம் செயல்பட அனுமதியில்லை.
* சமூக, அரசியல், விளையாட்டு, பொழுது போக்கு, மத கூட்டங்கள் நடத்த அனுமதியில்லை.
* வழிபாட்டுத் தலங்கள் மூடியே இருக்கும்
* சலூன் கடைகள் செயல்பட அனுமதியில்லை.
* உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.

இவ்வாறு டெல்லி அரசின் புதிய உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த பகுதிகளில் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தை சென்னை உள்பட சில பகுதிகளை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் சலூன் கடைகள் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.

கேரளாவில் 50 சதவீத பணியாளர்களுடன் வணிக வளாகங்கள், முடி திருத்தும் நிலையங்கள் உள்ளிட்டவை பணிகளை தொடங்க முதல்வர் பினராயி விஜயன் அனுமதி அளித்துள்ளார்.

இந்த நிலையில், டெல்லியிலும் இயல்பு நிலையை திரும்ப கொண்டு வரும் விதமாக கட்டுப்பாடுகளை தளர்த்தி கெஜ்ரிவால் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

.