This Article is From Apr 17, 2020

சாலையில் சிதறிக் கிடந்த ரூபாய் நோட்டுகள்! கொரோனா அச்சத்தால் எடுக்காத பொதுமக்கள் #Video

மத்தியப் பிரதேசத்தில் 938 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், தலைநகர் இந்தூரில் மட்டும் 554 பேருக்கு பாதிப்பு உள்ளது. 37 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

சாலையில் சிதறிக் கிடந்த ரூபாய் நோட்டுகள்! கொரோனா அச்சத்தால் எடுக்காத பொதுமக்கள் #Video

மொத்தம் ரூ. 6,480 மதிப்பள்ள நோட்டுகளை சாலையில் இருந்து போலீசார் சேகரித்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • ரூபாய் நோட்டுகள் வழியாகவும் கொரோனா பரவ அதிக வாய்ப்பு உள்ளது
  • சாலையில் கிடந்த ரூ. 6,480 மதிப்புள்ள நோட்டுகளை மக்கள் யாரும் எடுக்கவில்லை
  • போலீசார் பாதுகாப்பான முறையில் ரூபாய் தாள்களை எடுத்துச் சென்றனர்
Indore:

கொரோனா பரவல் அச்சத்தின் காரணமாக சாலையில் சிதறிக்கிடந்த ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் யாரும் எடுத்துச் செல்லவில்லை. இதனை பாதுகாப்பு படையினர் உபகரணங்கள் மூலம் பத்திரமாக கொண்டு சென்றனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. மாநிலத்தில் 500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மதியம் சாலையில் ரூ. 20, 50, 200, 500 நோட்டுக்கள் சிதறிக் கிடந்துள்ளன. ரூபாய் நோட்டுக்கள் மூலம் கொரோனா பரவக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக யாரும் அவற்றை தொட்டுப்பார்க்கவில்லை.

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ரூபாய் நோட்டுக்களை பார்த்துள்ளனர். அவர்களும் நேரடியாக கையால் எடுக்காமல் இடுக்கி போன்ற கருவியைக் கொண்டு ரூபாய் நோட்டுகளை எடுத்துச் சென்றனர்.
 

இந்த ரூபாய் நோட்டுகளுக்கு உரிமை கோரி யாரும் போலீசாரை அணுகவில்லை.

சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். யாரேனும் தவறுதலாக ரூபாய் நோட்டுகளை விட்டுச் சென்றுள்ளார்களா அல்லது கொரோனாவை பரப்ப வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இந்த ரூபாய் நோட்டுகள் சாலையில் போடப்பட்டதா என விசாரணை நடத்தப்படுகிறது.

மொத்தம் ரூ. 6,480 மதிப்புள்ள நோட்டுகளை சாலையில் இருந்து போலீசார் சேகரித்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் 938 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், தலைநகர் இந்தூரில் மட்டும் 554 பேருக்கு பாதிப்பு உள்ளது. 37 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 

.