This Article is From Aug 30, 2020

நாடு முழுவதும் 35 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! இதுவரை 63,498 பேர் உயிரிழப்பு!

இதுவரை நாடு முழுவதும் 4,14,61,636 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,55,027 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 35 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! இதுவரை 63,498 பேர் உயிரிழப்பு!

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

New Delhi:

இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 35,42,734 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 7,65,302 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 27,13,934 பேர் குணமடைந்துள்ளனர். அதே போல 63,498 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று அதிகபட்சமாக 78,761 பேர் கொரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 948 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 26வது நாளாக அதிகபட்ச ஒரு நாள் புதிய கொரோனா எண்ணிக்கையை இந்தியா பதிவு செய்து வருகின்றது.

இதுவரை நாடு முழுவதும் 4,14,61,636 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,55,027 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

தற்போது சர்வதேச அளவில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு, செப்டம்பர் 7 முதல் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கவும், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே முழு முடக்க கட்டுப்பாடுகளை முற்றிலுமாக நீக்கவும், அரசியல், கலாச்சார, மத நிகழ்ச்சிகளுக்கு 100 நபர்களுடன் செப். 21 முதல் அனுமதியையும் அன்லாக் 4 வழிகாட்டுதலாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.