This Article is From May 09, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 60,000ஐ நெருங்கியது; 1,981 பேர் உயிரிழப்பு!

COVID-19 Cases: ஊரடங்கை தளர்த்தியதும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும், பின்னர் குறைய தொடங்கும். தொடர்ந்து, ஜூலை மாத இறுதியில் வைரஸ் பாதிப்பு உச்சத்தை எட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 60,000ஐ நெருங்கியது; 1,981 பேர் உயிரிழப்பு!

Coronavirus, India: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 60,000ஐ நெருங்கியது

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 60,000ஐ நெருங்கியது
  • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 3,320 பேர் பாதிப்பு
  • மொத்தமாக இதுவரை கொரோனாவால் 1,981 பேர் உயிரிழந்துள்ளனர்.
New Delhi:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 59,662 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 3,320 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 95 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மொத்தமாக இதுவரை கொரோனாவால் 1,981 பேர் உயிரிழந்துள்ளனர். 17,847 பேர் குணமடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

குணமடைபவர்களின் எண்ணிக்கையானது கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, 26.59 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 29.91 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் ஜூலை மாத இறுதியில் உச்சத்தை எட்டும் என்று உலக சுகாதார அமைப்பின் சிறப்பு கொரோனா மருத்துவர் டேவிட் நபரோ என்டிடிவிக்கு தெரிவித்துள்ளார். அதனால், ஊரடங்கை தளர்த்தும் போது, அதிகமான பாதிப்புகள் இருக்கும். ஆனால், அதற்கு மக்கள் பயப்படக்கூடாது. வரும் மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும். ஆனால், இந்தியாவில் ஸ்திரத்தன்மை இருக்கும் என்றும் அவர் கூறினார். 

ஊரடங்கை தளர்த்தியதும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும், பின்னர் குறைய தொடங்கும். தொடர்ந்து, ஜூலை மாத இறுதியில் வைரஸ் பாதிப்பு உச்சத்தை எட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார் 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட முதல் மாநிலமான கேரளாவில் 100 நாட்களுக்கு பின்னர், தற்போது அங்கு பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவாக காணப்படுகிறது என அம்மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். கேரளாவில் முதல் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 100 நாட்கள் ஆன நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 16 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார். 

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானம் மூலம் 3 குழந்தைகள் உட்பட 356 இந்தியர்கள் நேற்று நள்ளிரவில் சென்னை வந்தடைந்தனர். தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அரசின் இலவச தனிமைப்படுத்தல் மையத்திலும் இருக்கலாம் அல்லது பணம் கொடுத்து விடுதிகளிலும் தங்கிக்கொள்ளலாம் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய தூதரக இணையதளத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, சுமார் 3.42 மில்லியன் இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதாகவும், இது அந்த நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 30 சதவீதமாகும் என்று கூறப்படுகிறது. அந்தவகையில், இந்தியா திரும்பி வருவதற்கு 6,500 கர்ப்பிணி பெண்கள் உட்பட 2,00,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து இந்த மீட்பு நடவடிக்கையானது, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ரஷ்யா, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

கொரோனா வைரஸுடன் வாழ இந்தியா கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இன்று, நாம் ஊரடங்கை தளர்த்துவது குறித்தும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் அழைத்து வருவதைப் பற்றி பேசும்போது, நமக்கு முன்னால் ஒரு பெரிய சவால் உள்ளது, என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

நாம் வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். நாம் இருக்கும்போது வைரஸுடன் வாழ கற்றுக்கொள்வது பற்றி பேசும்போது, வைரஸுக்கு எதிரான தடுப்பு வழிகாட்டுதல்கள் ஒரு நடத்தை மாற்றமாக செயல்படுத்தப்பட வேண்டும் "என்று சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

ஒட்டுமொத்தமான பாதிப்பில் 60 சதவீதமானது மும்பை, டெல்லி உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களில் இருந்து மட்டுமே பதிவாகியுள்ளது. மும்பையில், 11,394 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 437 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில், 5,980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 66 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தின் அகமதாபாத்தில் 4,491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 321 பேர் உயிரிழந்துள்ளனர். 42 சதவீதம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர் திரும்பி செல்வதற்காக ரயில்வே துறையால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, 222 சிறப்பு ரயில்கள் மூலம் 2.5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பி சென்றுள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

.